30 05 2021 கடந்த இரண்டு வாரங்களாகவே பத்ம சேஷாத்ரி பள்ளியைப் பற்றிய விமர்சனங்கள்தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் காணமுடிகிறது. அதனைத் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் தொடர்பான குற்றங்கள் அரங்கேறும் மற்ற பள்ளிகளைப் பற்றியும் பல இந்நாள் மற்றும் முன்னாள் பேச ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில், பிஎஸ்பிபி பள்ளியின் முன்னாள் மாணவியான வனிதா விஜயகுமார் தான் படித்த பள்ளியைப் பற்றியும் குழந்தை வளர்ப்பு பற்றியும் தன்னுடைய யூடியூப் வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டார்.
நான் மட்டுமல்ல என் தங்கைகள் ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவியும் பிஎஸ்பிபி பள்ளியில்தான் படித்தோம். சாதாரணமாக எங்களுக்கு அங்கு சீட் கிடைக்கவில்லை. அதற்காக எங்கள் அப்பா மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். நான் படிக்கிற காலத்தில் இதுபோன்ற எந்தவித பிரச்சனைகளும் இல்லை. உண்மையில் அந்தப் பள்ளியில் என்னுடைய நாட்கள் மிகவும் அழகானவை. ஆனால், அங்கு இதுபோன்று நாடாகும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
இதுபோன்ற பிரச்சனை என்றதும், காவல் துறையினர் வேகமாக செயல்பட்டு, சம்பந்தப்பட்டவரைக் கைது செய்த விஷயம் பாராட்டுக்குரியது. இப்படி செய்தால்தான் மற்றவர்களுக்கும் பயம் வரும். இதனாலேயே பல பள்ளிகள் பற்றிய உண்மைகளும் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இடெஹல்லாம் தெரிஞ்சும் எப்படி பள்ளி நிருவாகம் ஆக்ஷன் எடுக்காமல் இருந்தது என்பதுதான் எனக்கு கேள்விக்குறியாக உள்ளது. இப்போதாவது வெளியே பேசிக்கிறோமே என்று ஒருபக்கம் நிம்மதியாகவும் இருக்கிறது.
இதற்கான தேர்வு பெற்றோர்களிடம் உள்ளது. தினமும் உங்கள் குழந்தைகளோடு அமர்ந்து 5 நிமிடமாவது பேசுங்கள். எல்லா குழந்தைகளும் தங்களுடைய பிரச்சனைகளை வெளிப்படையாகச் சொல்லிவிட மாட்டார்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி நீங்கதான் பேசவேண்டும். அதேபோல அவர்கள் ஏதாவது குறை மற்றும் புகாரை உங்களிடம் சொன்னால், அதனை அலட்சியப்படுத்தாமல், என்ன ஏது என்று ஆராய்ந்து பாருங்கள்.
source https://tamil.indianexpress.com/lifestyle/vanitha-vijayakumar-shares-her-psbb-school-experience-tamil-news-308722/