வெள்ளி, 21 மே, 2021

எனது மகனா இருந்தாலும் ஒரே சட்டம் தான் : உதயநிதிக்கு தடை போட்ட முதல்வர்

 

20.5.2021தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில்ல உள்ள நிலையில், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் தடை விதித்த்து பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தமிழகத்தில நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். இந்த தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று திமுக வட்டாரத்தில் பேச்ச நிலவிய நிலையில், திரைத்துறையில் பிஸியாக இருப்பதால் வாய்ப்பு தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில் ஆவடி தொகுதியில் வெற்றிபெற்ற நாசர் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் நிலையில், அந்த தொகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டமன்ற அலுவலகத்தை உதயநிதி ஸ்டாலினை வைத்து பிரம்மாண்ட விழா நடத்தி அலுவலகத்தை திறந்து வைக்க ஏற்பாடு செய்திருந்தார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் அனைத்து விழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு அனுமதித்தால், சர்ச்சை எழும் என்று யோசித்து இந்த விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மாலையில் நடைபெற இருந்த இந்தவீழாவுக்கு, மதியமே தடை விதிக்கப்பட்டது. முதல்வரின் இந்த உத்தரவினால், அமைச்சர் மட்டுமின்றி தொண்டர்களும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் தனது மகன் என்றும் கூட பாராமல் விழாவுக்கு தடை விதித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.