ஞாயிறு, 23 மே, 2021

உருமாறிய கொரோனவிலிருந்து பாதுகாக்க இரண்டு தடுப்பூசி அளவுகள் தேவை

23.5.2021  இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட மாறுபட்ட கொரோனா வைரஸ் பி .1.617.2-லிருந்து அறிகுறி தொற்றுக்கு எதிராக “வலுவான பாதுகாப்பை” வழங்க கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகள் தேவைப்படுகின்றன. இதனை இங்கிலாந்து சுகாதாரத் துறை மற்றும் சமூக பராமரிப்பு நிர்வாக நிறுவனம் கடந்த சனிக்கிழமை பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து (PHE), பைனான்சியல் டைம்ஸில் தெரிவித்துள்ளது.

பி .1.617.2, இங்குள்ள “அதிகம் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக” கருதப்படுவதும், தடுப்பூசிகளின் கடுமையான பற்றாக்குறையுடன் நாடு போராடுவதும், இந்தியாவில் பொது சுகாதார சவாலை எடுத்துக்காட்டுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி இந்தியா தனது நோய்த்தடுப்புத் திட்டத்தைத் தொடங்கியதிலிருந்து சுமார் 43.05 மில்லியன் மக்கள் மட்டுமே அதாவது இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 3 சதவீதம் பேர், கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளைப் பெற்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு சுகாதார அமைச்சகத்தின் தற்காலிக தரவுகளின்படி, 151.90 மில்லியன் மக்கள் குறைந்தது ஒரு டோஸைப் பெற்றுள்ளனர்.

PHE -ன் பகுப்பாய்வு, இரண்டு கோவிட் -19 தடுப்பூசிகளால் வழங்கப்பட்ட பாதுகாப்பைப் பார்த்தது. அவை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆஸ்ட்ராஜெனெகாவுடன் உருவாக்கியது மற்றும் அமெரிக்க மருந்தக நிறுவனமான ஃபைசர் ஜெர்மன் பயோடெக் நிறுவனமான பயோஎன்டெக் உடன் உருவாக்கியது.

அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பதிப்பை இந்தியாவில், புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, “கோவிஷீல்ட்” என்ற பெயரில் வழங்குகிறது.

இந்த தடுப்பூசிகளில் இரண்டு அளவுகள் பி .1.617.2 மாறுபாட்டிற்கு எதிராக 81 சதவீத பாதுகாப்பையும், பி 1.1.7 மாறுபாட்டிற்கு எதிராக 87 சதவீத பாதுகாப்பையும் வழங்குவதாக இங்கிலாந்து நிறுவனம் கண்டறிந்தது.

இதனுடன் ஒப்பிடும்போது, ​​ஒரு டோஸ் அளவு, பி .1.617.2-லிருந்து அறிகுறி தொற்றுக்கு எதிராக 33 சதவீத பாதுகாப்பையும், பி 1.1.7 க்கு எதிராக 51 சதவீத பாதுகாப்பையும் மட்டுமே வழங்கியுள்ளது.

“ஒரு ஷாட், B.1.1.7 உடன் ஒப்பிடும்போது, B.1.617.2-க்கு எதிராக 35 சதவிகிதம் குறைவான பாதுகாப்பை வழங்குகிறது என்று இது அறிவுறுத்துகிறது” என எஃப்டி அதன் தரவு பகுப்பாய்வில் குறிப்பிட்டிருந்தது.

இங்கிலாந்து அரசாங்கத்தின் புதிய மற்றும் வளர்ந்து வரும் சுவாச வைரஸ் அச்சுறுத்தல் ஆலோசனைக் குழுவின் (NERVTAG) கூட்டத்தில், PHE-ன் தரவு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்திய SARS-CoV-2 ஜீனோமிக்ஸ் கன்சோர்டியம் (INSACOG) கீழ் பல்வேறு நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகள், B.1.617.2 மாறுபாட்டை ஆதிக்கம் செலுத்தும் “கவலையின் மாறுபாடாக” எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளனர்.

SARS-CoV-2-ன் 20,000-க்கும் மேற்பட்ட மாதிரிகள் மாநிலங்களிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 8,000 மாதிரிகளில் B.1.617 “ஆதிக்கம் செலுத்தும்” கவலை வகைகளை அடையாளம் காணப்பட்டுள்ளன.

மே 13 அன்று, கோவிஷீல்டின் முதல் மற்றும் இரண்டாவது அளவுகளுக்கு இடையிலான இடைவெளியை 12-16 வாரங்கள் வரை நீட்டித்தது.

அதே நேரத்தில், இங்கிலாந்து அரசாங்கம் இதற்கு நேர்மாறாக செயல்பட்டது. நாட்டில் முன்னுரிமை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அளவுகளுக்கு இடையிலான இடைவெளியை 12 வாரங்களிலிருந்து எட்டு வாரங்களாகக் குறைத்தது. அங்குள்ள அரசாங்கம், பி .1.617.2 ஹாட்ஸ்பாட்களில், அதிகரித்த தடுப்பூசிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது என்று எஃப்டி தெரிவித்துள்ளது.

கோவிஷீல்ட், இங்குக் கிடைக்கும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி. இதுவரை குறைந்தது ஒரு டோஸ் மூலம் தடுப்பூசி போடப்பட்ட 19 கோடியில், 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கிடைத்துள்ளது.

சமீபத்திய மாடலிங் B.1.617.2, B.1.1.7-ஐ விட 50 சதவிகிதம் அதிகமாகப் பரவக்கூடியதாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தது. இருப்பினும் கடந்த வாரம் புதிய டேட்டா, “அது அவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தாது என்று குறிக்கிறது” என்று FT குறிப்பிடுகிறது.

source https://tamil.indianexpress.com/india/variant-in-india-needs-two-vaccine-doses-for-better-safety-tamil-news-306058/