திங்கள், 24 மே, 2021

ரத்த அணுக்களை அதிகரிக்கும்: பப்பாளி இலை ஜூஸ் தயார் செய்வது எப்படி?

 பொதுவாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும்போது, ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு ஏற்படுகிறது. ரத்த அணுக்கள் விரைவாக குறைவது என்பது நோயின் தீவரத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. அப்படி ரத்த அணுக்கள் அவர்களுக்கு உடனடியாக முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், இப்போது, ரத்த அணுக்களின் எண்ணிக்கையில் திடீரென வீழ்ச்சி ஏற்படுவது என்பது கோவிட்-19 அறிகுறியாக கூறப்படுகிறது. ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு ஏற்பட்டால், அவருக்கு பப்பாளி இலை ஜூஸ் கொடுத்து ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். நோயின் தீவிரத்தில் இருந்து மீட்கலாம்.

பலரின் வீடுகளிலும் சாதாரணமாக காணப்படும் பப்பாளி இலையில் இவ்வளவு நன்மையா என்று வியக்கும் வகையில் நன்மைகள் இருக்கிறது. ரத்த அணுக்களை அதிகரிக்க பப்பாளி இலை ஜூஸ் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள். பப்பாளி இலையில் என்ன மருத்துவ குணம் இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

பப்பாளி இலைகளில் அசிட்டோஜெனின் எனப்படும் தனித்துவமான பைட்டோ கெமிக்கல் உள்ளது. இது ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிக்கும்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த அணுக்கல் குறையும்போத் இந்த பப்பாளி இலை ஒரு சிறந்த தீர்வாக இருந்தது. இது நோயில் இருந்து விரைவாக மீட்கப்படுவதை உறுதி செய்கிறது. பப்பாளி இலைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டின்கள் போன்ற பல இயற்கை தாவர சேர்மங்கள் உள்ளன. அவை சோர்வைப் போக்குவதோடு ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. தீங்கு விளைவிக்கும் நோக் கிருமிகளை அழித்து உங்கள் இரத்த அணுக்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாமல் தடுக்கின்றன.

பப்பாளி இலை ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:

4 பப்பாளி இலைகள், ஒரு கப் தண்ணீர்

செய்முறை:

முதலில் பப்பாளி இலைகளை சரியாக சுத்தமாகக் கழுவி பொடியாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

பப்பாளி இலை துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள்.

பிறகு அதை அப்படியே ஒரு 2 நிமிடம் விடுங்கள். இப்போது, தண்ணீர் பச்சை நிறத்தில் காணப்படும்.

அந்த தண்ணீரை வடிகட்டி ஒரு கோப்பையில் ஊற்றிக்கொள்ளுங்கள். குடிக்க முடியாத அளவுக்கு மிகவும் கசப்பாக இருந்தால், சிறிது தேன் அல்லது வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த பப்பாளி இலை ஜூஸை பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை 30 மில்லியும், சிறுவர்களுக்கு 5-10 மில்லியும் கொடுங்கள்.

அதெ போல, ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு சி வைட்டமின் ரொம்ப முக்கியம். அதற்கு ஆரஞ்சு ஜூஸ், கேரட் ஜூஸ், காலிஃபிளவர் சூப், பூசணி சூப், அன்னாசி பழச்சாறு, குடை மிளகாய் மற்றும் தக்காளி சாலட் சேர்த்து வறுத்த ப்ரோக்கோலியை சாப்பிடலாம். புரதம், வைட்டமின் கே மற்றும் இரும்புச்சத்து இருக்கிற பருப்பு, வறுத்த வேர்க்கடலை, கீரைகள், காய்கறிகள் மற்றும் பிஸ்தாவை சாப்பிடுங்கள்

source https://tamil.indianexpress.com/lifestyle/papaya-leaf-juice-for-increase-platelet-count-in-covid-19-situation-306212/