வெள்ளி, 21 மே, 2021

கொரோனா பரிசோதனை கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு நிர்ணயம்

 20 05 2021 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், மக்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள எவ்வளவு கட்டணம் என்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, தனியார் ஆய்வு கூடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய ரூ.900 கட்டகம் நிர்ணையும் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு ரூ.550 கட்டணம் நிர்ணையம் செய்யப்ட்டுள்ளது. இதில் முதல்வர் மருத்துவ காப்பீடு இல்லாத பயனாளிகளுக்கு 900 ரூபாய் கட்டணமும், வீட்டிற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-கட்டணமும், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளர்களுக்கு ரூ.900 கட்டணமும் நிர்ணயம் செய்திருந்த நிலையில், தற்போது இந்த கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று தொடங்கியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-covid-19-test-fees-reduction-in-tamilnadu-update-305275/