வெள்ளி, 28 மே, 2021

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசு ஏற்று நடத்த தயார்: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

 

27.05.2021 இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒருபக்கம் தடுப்பூசி பற்றாக்குறை பெரும்  பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் மாநில அரசுகள் தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு உலகளாவிய முயற்சிகளுக்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பயனற்று இருக்கும் எச்.எல்.எல் பயோடெக் லிமிடெட் நிறுவிய ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை (ஐ.வி.சி) தடுப்பூசி தயாரிக்க பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு, தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு (மே 25) ஆலையில் ஆய்வு செய்த முதல்வர்ஸ்டாலின்,  வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வசதி செயல்படாமல் உள்ளது, தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான அலகு வேலை செய்ய, தமிழ்நாட்டிற்கு கடந்த கால கடன்கள் இல்லாமல் மற்றும் முழு செயல்பாட்டு சுதந்திரத்துடன் குத்தகைக்கு ஒப்படைக்குமாறு முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மேலும் தமிழக அரசின் இந்த செயல்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்குமாறு மாநில அரசு தொடர்ந்து மத்திய அரவை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்

தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து கூறியுள்ள அவர், தமிழகத்தின் சென்னை மற்றும் பிற நகரங்களில் கொரோனா வைரஸின் பரவல் குறைந்து வருவதாகவும், கூடிய விரைவில் நிலைமை கட்டுக்குள் வரும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். .

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்,  சுமார் 700 கோடி ரூபாய் தடுப்பூசி உற்பத்தி வசதிக்காக செலவழித்துள்ளதாகவும், தற்போது இது நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஐ.வி.சி இயக்க ஒரு பார்ட்னரை கண்டுபிடிப்பதற்கான சமீபத்திய முயற்சியும், ஏலதாரர்கள் இல்லாததால்  அந்த முயற்சி பலன் தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் “இந்த நவீன வசதி உடனடியாக செயல்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது நமது அரசு மற்றும் நமது தேசத்தின் நலனுக்காக. இது நாட்டின் தடுப்பூசி உற்பத்தி திறனை கணிசமாக மேம்படுத்துவதோடு, நாட்டின் ஒட்டுமொத்த தடுப்பூசி தேவைகளையும், குறிப்பாக தமிழகத்தையும் பூர்த்தி செய்யும், ”என்று அவர் கூறினார்.

இந்நிலையில், மாநில அரசு உடனடியாக பொருத்தமான பார்ட்னரை கண்டுபிடித்து, உற்பத்தியை விரைவாக தொடங்க முயற்சிக்கும் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மத்திய அரசின் முதலீட்டில் ஒரு பகுதியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான நிதி ஏற்பாட்டை செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசிடம் பேசிய ஸ்டாலின், தமிழ்நாடு மட்டுமல்ல, பல மாநிலங்களும் தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொண்டன, தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய முயற்சிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், திமுக பொறுப்பேற்றதிலிருந்து, சராசரியாக சுமார் 78,000 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

இதில் தடுப்பூசி வீணாதல் குறித்து பேசிய அவர், , கடந்த இரண்டு வாரங்களில் தடுப்பூசி வீணானது ஒரு சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் இதற்கு முன்பு ஆறு சதவீதமாக இருந்தது. மே 24 அன்று தொடங்கிய நீடிப்பு குறித்து மாவட்ட நிர்வாகிளுடன் பேசினார். வாரந்தோறும் கடுமையான கடுமையான ஊரடங்கை நீடிக்க முடியுமா என்று கேட்கப்பட்டபோது, ​​ஒரு அளவிற்கு திருப்தி இருந்தபோதிலும், முழுமையான திருப்தி இல்லை என்றும், மே 31 க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்க முடியுமா என்று ஆலோசனை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/tamilnadu-government-writes-to-pm-offers-to-take-over-vaccine-unit-of-hll-biotech-307804/