23.5.2021 பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக டெல்லியில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர், கொரோனா தொற்று பரவும் நிலைமை பொருட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், தற்போது கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 24 மணிநேரத்தில், 1,600 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவருக்கும் ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
டெல்லி மக்களின் ஒத்துழைப்பு காரணமாகவே கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அமலிலுள்ள ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இந்த வார ஊரடங்குக்கு பின்னர் நிலைமை தொடர்ந்து கட்டுக்குள் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/corona-cases-shows-gradual-decrease-in-delhi-aravind-kejriwal.html