: சமூக ஊடக தளங்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுக்கான புதிய விதிகள்- இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு என அழைக்கப்படுகின்றன. இது கடந்த புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், அனைத்து சமூக ஊடக தளங்களையும் அதன் குறைகளை நிவர்த்தி செய்து இணக்க ஒரு மெக்கானிசம் அமைக்குமாறு கேட்டுக் கொண்டன. இதில் ஒரு குடியுரிமை குறை தீர்க்கும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி மற்றும் ஒரு தொடர்பு நபரை நியமித்தல் ஆகியவை அடங்கும். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த தளங்களில் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதாந்திர அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. மேலும், உடனடி செய்தியிடல் பயன்பாடுகளுக்கு ஒரு செய்தியின் முதல் தோற்றத்தைக் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளும் அடங்கும்.
இந்த தேவைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79-ன் கீழ் சமூக ஊடக இடைத்தரகர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை வழங்கவேண்டும்.
ஐடி சட்ட பிரிவு 79 என்றால் என்ன?
மூன்றாம் தரப்பு தகவல், தரவு அல்லது தகவல்தொடர்பு இணைப்புக்கு எந்தவொரு இடைத்தரகரும் சட்டப்பூர்வமாக பொறுப்பேற்க மாட்டார்கள் என்று பிரிவு 79 கூறுகிறது. கூறப்பட்ட இடைத்தரகர், எந்த வகையிலும் கேள்விக்குரிய செய்தியைப் பரப்புவதைத் தொடங்கினால், அனுப்பப்பட்ட செய்தியின் பெறுநரைத் தேர்வுசெய்து, பரிமாற்றத்தில் உள்ள தகவலை மாற்றியமைக்காவிட்டால், இந்த பாதுகாப்பு சட்டம் பொருந்தும்.
அதாவது, ஒரு செய்தியை A பகுதியிலிருந்து B பகுதிக்கு அனுப்பும்போது, அதன் மெசேஞ்சர் எந்த வகையிலும் தலையிடாமல் செயல்படும் வரை, எந்தவொரு சட்ட வழக்குகளிலிருந்தும் அது பாதுகாப்பாக இருக்கும்.
எப்படியிருந்தாலும், பிரிவு 79-ன் கீழ் வழங்கப்பட்ட பாதுகாப்பு, அரசாங்கத்தினாலோ அல்லது அதன் ஏஜென்சிகளாலோ அறிவிக்கப்பட்டாலும், கேள்விக்குரிய பொருளை அணுகுவதை உடனடியாக முடக்கவில்லை என்றால் பாதுகாப்பு வழங்கப்படாது. இந்த செய்திகளின் எந்தவொரு ஆதாரத்தையும் அல்லது அதன் பிளாட்ஃபார்மில் உள்ள உள்ளடக்கத்தையும் இடைத்தரகர் சேதப்படுத்தக்கூடாது.
பாதுகாப்பிற்கான இந்த விதிமுறைகள் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டன?
மூன்றாம் தரப்பினரின் நடவடிக்கைகளிலிருந்து இடைத்தரகர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் 2004-ல் ஒரு காவல்துறையினரின் வழக்கைத் தொடர்ந்து கவனத்திற்கு வந்தது. நவம்பர் 2004-ல், ஒரு ஐ.ஐ.டி மாணவர் ஒரு ஏல வலைத்தளமான bazee.com-ல் விற்பனைக்கு ஒரு ஆபாச வீடியோ கிளிப்பை வெளியிட்டார். அந்த மாணவரோடு, அப்போதைய வலைத்தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அவ்னிஷ் பஜாஜ் மற்றும் அப்போதைய மேலாளர் ஷரத் திகுமார்டி ஆகியோரையும் டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்தது.
விடுதலை செய்யப்படுவதற்கு முன்பு பஜாஜ், நான்கு நாட்கள் திகார் சிறையில் கழித்தார். அதைத் தொடர்ந்து அவர் மற்றும் அவருடைய பார்ட்னர் மீது டெல்லி காவல்துறை அளித்த கிரிமினல் புகாரை ரத்து செய்யக் கோரி வழக்குத் தாக்கல் செய்தார். வலைத்தளத்தின் எந்தவொரு தலையீடும் இல்லாமல், பரிவர்த்தனை நேரடியாக வாங்குபவருக்கும் விற்பனையாளருக்கும் இடையில் இருப்பதாக அவர் வாதிட்டார்.
2005-ம் ஆண்டில், டெல்லி உயர்நீதிமன்றம், பஜாஜ் மற்றும் அவரது வலைத்தளத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வலைத்தளத்திற்கு எதிரான வழக்கு, ஆபாசமாக இருந்த வீடியோ கிளிப் மற்றும் அதன் உள்ளடக்கங்களைப் பட்டியலிடுவதற்காக உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில் பஜாஜ் ஐடி சட்டத்தின் 85-வது பிரிவின் கீழ் பொறுப்பேற்றார். ஐ.டி சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனம் ஒரு குற்றத்தைச் செய்யும்போது, அந்த நேரத்தில் பொறுப்பான அனைத்து நிர்வாகிகளும் அதற்காக பொறுப்பேற்கப்பட வேண்டும் என்று இந்த பிரிவு கூறுகிறது.
இந்த முடிவை உச்சநீதிமன்றம் 2012-ல் ரத்து செய்தது. அந்த பரிவர்த்தனையில் அவர்கள் நேரடியாக ஈடுபடாததால், பஜாஜ் அல்லது வலைத்தளத்தை பொறுப்புக்கூற முடியாது என்று கூறியது. இந்த முடிவைத் தொடர்ந்து, பிரிவு 79-ஐ அறிமுகப்படுத்த ஐ.டி சட்டம் திருத்தப்பட்டது.
சட்டப் பிரிவு 79-ன் கீழ் ஒரு சமூக ஊடக நிறுவனம் இனி பாதுகாக்கப்படாவிட்டால் என்ன ஆகும்?
இப்போதைக்கு, ஒரே இரவில் எதுவும் மாறாது. சமூக ஊடக இடைத்தரகர்கள் எந்தவிதமான சிக்கல்களும் இன்றி தொடர்ந்து செயல்படுவார்கள். மக்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் தங்கள் பக்கங்களில் உள்ளடக்கத்தை போஸ்ட் செய்யவும் பகிரவும் முடியும்.
ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக இடைத்தரகர்கள், பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட புதிய விதிகளின் கீழ், ஒரு குடியுரிமை குறை தீர்க்கும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி மற்றும் ஒரு நோடல் தொடர்பு நபரை இதுவரை நியமிக்கவில்லை. பயனர்களால் சமர்ப்பிக்கப்பட்ட குறைகள் மற்றும் புகார்கள் குறித்து மாதாந்திர நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கைகளையும் சமர்ப்பிக்க அவர்கள் தவறிவிட்டனர். எனவே, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79-ன் கீழ் பாதுகாப்பு அவர்களுக்கு இருக்காது.
மேலும், தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளின், விதி 4 (அ), குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடைத்தரகர்கள் ஒரு தலைமை இணக்க அதிகாரியை (chief compliance officer) நியமிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இடைத்தரகர் உரியத் தேவைகளை கவனிக்கத் தவறினால், பாதுகாப்பு குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது.
ஒரு ட்வீட், பேஸ்புக் போஸ்ட் அல்லது இன்ஸ்டாகிராம் போஸ்ட் , அதன் உள்ளூர் சட்டங்களை மீறினால், உள்ளடக்கத்தைப் பகிரும் நபரை மட்டுமல்ல, இவற்றின் நிர்வாகிகளையும் பதிவு செய்வதற்கான உரிமைகளுக்குள் இருக்கும் என்று இந்தப் பிரச்சனை குறித்து சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.
“ஐடி சட்டத்தின் பிரிவு 69 (அ)படி இணங்க, ஐடி விதிமுறைகளின் விதிகளைப் படித்தால், சிசிஓவை 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்கும் வகையிலான குற்றமாகக்கூட இருக்கக்கூடும் என்று அறிவுறுத்துகிறது” என்று பொது கொள்கை think-tank The Dialogue நிறுவனர் காசிம் ரிஸ்வி கூறினார்.
பிரிவு 79-ல் சில பாதுகாப்பு இல்லாதது, பிளாட்ஃபார்மில் பணியாற்றும் எந்த தவறும் செய்யப்படாத ஊழியர்கள்கூட பொறுப்பேற்க சூழ்நிலை வழிவகுக்கும் என்று SFLC.in -ன் சட்ட இயக்குநர் பிரசாந்த் சுகாதன் தெரிவித்தார். “இது சமூக ஊடக நிறுவனங்களின் ஊழியர்களைத் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கக் கூடிய சூழ்நிலைக்கு வழிவகுக்கும். இது அவர்களின் முதலாளி சட்டரீதியான விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யத் தவறுகிறது. ஊழியர்கள் தங்கள் தரப்பில் எந்த தவறும் செய்யப்படாமலே பொறுப்பேற்க முடியும்” என்று அவர் கூறினார்.
சமூக ஊடக இடைத்தரகர்களுக்குப் பாதுகாப்பு குறித்த உலகளாவிய விதிமுறைகள் என்ன?
பெரும்பாலான பெரிய சமூக ஊடக இடைத்தரகர்கள் அமெரிக்காவில் தங்கள் தலைமையகத்தைக் கொண்டிருக்கின்றன. அங்கு, 1996-ம் ஆண்டின் தகவல்தொடர்பு ஒழுக்கச் சட்டத்தின் பிரிவு 230-ல், இணைய தளங்களுக்கு எந்தவொரு உள்ளடக்கப் பயனர்களிடமிருந்தும் பாதுகாப்பை வழங்குகிறது. அமெரிக்க சட்டத்தில் இந்த ஏற்பாடுதான் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களை உலகளாவிய கூட்டு நிறுவனங்களாக மாற்ற உதவியது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
“கணினி சேவையின் எந்தவொரு வழங்குநரும் அல்லது பயனரும் மற்றொரு தகவல் உள்ளடக்க வழங்குநரால் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் வெளியிடுபவராகக் கருதப்பட மாட்டார்கள்” என்று இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79-ஐப் போலவே, தகவல்தொடர்பு ஒழுக்கச் சட்டத்தின் பிரிவு 230-ம் கூறுகிறது.
புத்தகத்தின் எழுத்தாளர் அல்லது வெளியீட்டாளருக்கும் புத்தகக் கடை உரிமையாளருக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்படாவிட்டால், இடைத்தரகர் ஒரு புத்தகக் கடை உரிமையாளரைப் போலவே இருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
source : https://tamil.indianexpress.com/explained/guidelines-digital-media-ethics-code-facebook-twitter-instagram-tamil-news-307610/