25.5.2021 India coronavirus deaths how far is peak Tamil News : கோவிட் -19 காரணமாக இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை இப்போது மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, இறப்பு எண்ணிக்கை 303,720-ஐ எட்டியுள்ளது. அவர்களில் கிட்டத்தட்டப் பாதி, அதாவது 1.5 லட்சம் இறப்புகள், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இரண்டாவது அலையின் போது நிகழ்ந்தன. மேலும் அதன் பெரும் எண்ணிக்கையானது, மார்ச் மாதத்திற்குப் பிறகு 1.4 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்தியா, ஏற்கெனவே உலகின் மூன்றாவது பெரிய இறப்பு எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது. 5.84 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ள அமெரிக்கா முதலிடத்திலும், 4.48 லட்சம் இறப்புகளைக் கண்ட பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன. உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் இந்தியா இப்போது 16% மற்றும் உலகளாவிய இறப்புகளில் 9% கொண்டிருக்கிறது.
இறப்பு எண்ணிக்கை உச்சத்தில் இருக்கிறதா?
இந்தியாவில் தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மே 6 அன்று உயர்ந்தது. அன்று, 4.14 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பிறகு புதிய வழக்குகளைக் கண்டறிவதில் நிலையான சரிவு ஏற்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கையின் போக்கு பொதுவாக இரண்டு வாரப் பின்னடைவைக் கொண்டிருப்பதால், இறப்பு எண்ணிக்கையும் குறையத் தொடங்கும் நேரமாக இது இருக்கலாம்.
தினசரி இறப்பு எண்ணிக்கையின் ஏழு நாள் நகரும் சராசரி எண்கள் இன்னும் உயர்ந்து கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு இருந்ததை விடக் கணிசமாக மெதுவாக இருந்தாலும், இடையில் அதன் எண்ணிக்கை குறைந்தது. கடந்த இரண்டு வாரங்களில், இந்த ஏழு நாள் சராசரி எண்ணிக்கை, ஒரு நாளைக்கு 4,000-ஆக இருந்ததிலிருந்து ஒரு நாளைக்கு 4,190 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மே மாதம்தான் இந்தியாவுக்குத் தொற்றுநோய்களின் கொடிய மாதமாக இருக்கிறது. இது ஏற்கெனவே 92,000 பேரின் இறப்புகளைக் கண்டது. இது, ஏப்ரல் மாதத்தைவிட இரு மடங்கு அதிகம். மேலும், ஒரு வாரம் உள்ளது.
ஆனால், நம்பிக்கையும் கூடவே உள்ளது. கடந்த சில நாட்களில் ஏராளமான இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த வாரங்களில் அவை கணக்கிடப்படவில்லை. மகாராஷ்டிராவின் தினசரி இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்டப் பாதி, இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட இறப்புகளை உள்ளடக்கியது. உதாரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, அரசு 1,320 கொரோனா வைரஸ் இறப்புகளைப் பதிவுசெய்தது. அவற்றில் 726, இரண்டு வாரங்களுக்கும் மேலானவை. தற்போது மிக அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்குப் பங்களிக்கும் இரு மாநிலங்களான கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலும் இதேதான் நடக்கிறது.
எப்படியிருந்தாலும், இறப்புகளைத் தாமதமாகப் புகாரளிக்கும் இந்த நிகழ்வு புதியதல்ல. இறப்புகளைப் புகாரளிப்பதில் எப்போதும் நீண்ட கால பின்னடைவு உள்ளது. உண்மையில், கர்நாடகா மார்ச் மாதத்திலிருந்து ஒரு சில இறப்புகளைப் பற்றி இப்போது அறிவித்து வருகிறது. மேலும், இப்போது நிகழும் சில இறப்புகள் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் கணக்கிடப்படும். இந்த நாட்களில் தினசரி எண்ணிக்கையில் வயதான இறப்புகளின் விகிதம் கணிசமாக அதிகமாக உள்ளது. அதாவது, மாநிலங்கள் தங்கள் backlog-ஐ அழித்துவிட்டால், வரும் நாட்களில் தினசரி இறப்பு எண்ணிக்கையில் கூர்மையான சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
சி.எஃப்.ஆர் வீழ்ச்சி
இறப்புகளின் எண்ணிக்கை சில வாரங்களுக்கு முன்பு இருந்ததைப் போல விரைவாக அதிகரிக்காததால், கடந்த 10 நாட்களில் தற்போதைய (வாராந்திர) இறப்பு விகிதத்தில் (case fatality ratio – சி.எஃப்.ஆர்) நிலையான சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஏழு நாள் காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு எதிராக எந்தவொரு ஏழு நாள் காலத்திலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை எடைபோட்டு, வாராந்திர சி.எஃப்.ஆர் கணக்கிடப்படுகிறது. இறப்பு விகிதங்களின் தற்போதைய விவரங்களை இது காட்டுகிறது.
இணைந்த வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி, வாராந்திர சி.எஃப்.ஆர் மார்ச் நடுப்பகுதியில் உயரத் தொடங்கியது. பிறகு, ஏப்ரல் மாத இறுதியில் உயர்ந்தது. அன்றிலிருந்து இப்போது குறைந்து வருகிறது. ஏப்ரல் இறுதியில் உள்ள அதன் உச்சம் இந்தியாவில் தொற்றுநோயின் மிகவும் குழப்பமான கட்டத்துடன் ஒத்துப்போகிறது. மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன் அல்லது ஐ.சி.யு-கள் இல்லாததால் கோவிட் -19 காரணமாகப் பலர் இறந்தனர்.
ஏப்ரல் இரண்டாம் பாதியில் இரண்டு வாரக் காலத்திற்கு, வாராந்திர சி.எஃப்.ஆர் உண்மையில் ஒட்டுமொத்த சி.எஃப்.ஆரை விஞ்சியது. ஒட்டுமொத்த சி.எஃப்.ஆர் இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்த மொத்த நோய்களின் எண்ணிக்கையை எதிர்த்து முழு தொற்றுநோய்க்கான மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை அளவிடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. ஆனால், அது இப்போது ஒட்டுமொத்த சி.எஃப்.ஆருக்குக் கீழே சென்றுவிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, வாராந்திர சி.எஃப்.ஆர் 1.07% ஆகவும், ஒட்டுமொத்த சி.எஃப்.ஆர் மிகவும் மெதுவான சரிவைக் காட்டும் 1.34% ஆகவும் இருந்தது. முந்தைய ஒரு வாரத்தில், நோய்த்தொற்றுக்கு ஆளான ஒவ்வொரு 10,000 பேரில் 107 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து இறப்புகளைக் கருத்தில் கொண்டால், உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு 10,000 தொற்றுநோய்களில் 134 பேர் இறந்துள்ளனர்.
வாராந்திர சி.எஃப்.ஆர் இப்போது குறைவாக உள்ளது. ஏனெனில், இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்த மிக உயர்ந்த வழக்கு எண்ணிக்கையில் தினசரி இறப்புகள் இப்போதுதான் அளவிடப்படுகின்றன. இருப்பினும், அடுத்தடுத்த நாட்களில், தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் விரைவான சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் சராசரியாக சுமார் 3.9 லட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக, இந்த நாட்களில் சுமார் 2.5 லட்சம் பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களில் இறப்பு எண்ணிக்கை குறையவில்லை என்றால், வாராந்திர சி.எஃப்.ஆர் குறைப்பு காரணமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை மிக அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் புகாரளித்த சத்தீஸ்கர், டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் கூட, கடந்த சில நாட்களில் அவர்களின் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதைக் காணமுடிகிறது. இருப்பினும், இது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் இறப்பு புள்ளிவிவரங்களின் கூர்மையான உயர்வால் ஈடுசெய்யப்பட்டதை விட அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் மகாராஷ்டிரா ஒவ்வொரு நாளும் 800 முதல் 1,000 இறப்புகள் வரை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில், கேரளா அதன் இறப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. முதன்முறையாக, ஒரு நாளில் 100-க்கும் மேற்பட்ட இறப்புகளை அரசு தெரிவிக்கத் தொடங்கியது. கேரளா, கடந்த மூன்று நாட்களில் 634 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இது மொத்த இறப்பு எண்ணிக்கையில் 10%-க்கு அருகில் உள்ளது.
source https://tamil.indianexpress.com/explained/india-covid-situation-coronavirus-deaths-how-far-is-peak-tamil-news-306734/