28/05/2021 Facebook to take actions against who repeatedly share false content Tamil News : நிறுவனத்தின் உண்மைச் சரிபார்ப்பு (fact-checker) அமைப்பால் மதிப்பிடப்பட்ட உள்ளடக்கத்துடன் நீங்கள் தொடர்பு கொண்டால், ஃபேஸ்புக் ஒரு அறிவிப்பை இனி அனுப்பும். தவறான செய்திகளைப் பரப்புவதில் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக பயன்பாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, தவறான உள்ளடக்கத்தைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க நிறுவனம் புதிய வழிகளைத் தொடங்குகிறது. தவறான தகவல்களைப் பகிரும் பக்கங்களில் ஒன்றை லைக் செய்தால், பயனர்கள் பாப் அப் வருவதைக் காண்பார்கள்.
பக்கத்தால் பகிரப்பட்ட தவறான உள்ளடக்கத்தைப் பற்றி பாப்-அப் விண்டோ உங்களுக்குத் தெரிவிக்கும். பின்னர், நீங்கள் பக்கத்தைப் பின்தொடர விரும்புகிறீர்களா அல்லது திரும்பிச் செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்கும். தவறான தகவல்களைப் பரப்பும் தனிப்பட்ட ஃபேஸ்புக் கணக்குகளுக்கான அபராதங்களையும் ஃபேஸ்புக் விரிவுபடுத்துகிறது.
உண்மைச் சரிபார்ப்பால் மதிப்பிடப்பட்ட உள்ளடக்கத்துடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதைத் தெரிவிக்க நாங்கள் புதிய வழிகளைத் தொடங்குகிறோம். தவறான தகவல்களைப் பகிரும் பக்கங்கள், குழுக்கள், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் டொமெயின்களுக்கு எதிராக நாங்கள் வலுவான நடவடிக்கை எடுத்துள்ளோம். இப்போது, தனிப்பட்ட ஃபேஸ்புக் கணக்குகளுக்கான அபராதங்களையும் சேர்க்க, இந்த முயற்சிகளில் சிலவற்றை நாங்கள் விரிவுபடுத்துகிறோம்” என்று நிறுவனம் ஒரு வலைப்பதிவு போஸ்டில் தெரிவித்துள்ளது.
உண்மைச் சரிபார்ப்பு பார்ட்னர்களில் ஒருவரால் மதிப்பிடப்பட்ட உள்ளடக்கத்தை அவர்கள் மீண்டும் மீண்டும் பகிர்ந்து கொண்டால், அது ஒரு நபரின் ஃபேஸ்புக் கணக்கிலிருந்து செய்தி ஊட்டத்தில் உள்ள அனைத்து போஸ்டுகளின் பகிர்வுகளைக் குறைக்கும்.
ஒரு பயனர் தவறான தகவல்களைக் கொண்ட போஸ்ட்டை பகிரும்போது, சமூக ஊடக நிறுவனம் ஓர் அறிவிப்பை அனுப்பும். இந்த அறிவிப்பில், உரிமைகோரலைத் தணிக்கும் உண்மை-சரிபார்ப்பவரின் கட்டுரையும், அவர்களைப் பின்தொடர்பவர்களுடன் கட்டுரையைப் பகிரத் தூண்டுவதும் அடங்கும். தவறான தகவல்களை மீண்டும் மீண்டும் பகிரும் நபர்கள் தங்கள் போஸ்டுகளை செய்தி ஊட்டத்தில் குறைவாக நகர்த்தக்கூடும் என்ற அறிவிப்பும் இதில் அடங்கும். எனவே, மற்றவர்கள் அவற்றைப் பார்ப்பது குறையும்.
source https://tamil.indianexpress.com/technology/facebook-to-take-actions-against-who-repeatedly-share-false-content-tamil-news-307843/