வெள்ளி, 21 மே, 2021

வருடத்திற்கு 90 கோடி கோவாக்ஸின் டோஸ்கள்; இலக்கு நிர்ணயித்த பாரத் பயோடெக்

21.5.2021  குஜராத் மாநிலத்தில் உள்ள தங்களின் ரேபிஸ் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் கூடுதலாக கோவாக்ஸின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலமாக மாதத்திற்கு 17 மில்லியன் தடுப்பூசிகளை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் கூடுதல் மேலாண்மை இயக்குநர் சுசித்திரா எல்லா குறிப்பிட்டுள்ளார்

ஐதராபாத்தை தளமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 2019ம் ஆண்டு ரேபிஸ் தடுப்பூசிகளை உருவாக்க க்லாக்ஸோஸ்மித்க்ளினிடம் GlaxoSmithKline இருந்து பெற்ற சிரோன் பேரிங் (Chiron Behring) தடுப்பூசி வசதியை பயன்படுத்த உள்ளது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் கூட்டாக இணைந்து கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஜி.எம்.பி. வசதியுடன் ஆண்டுக்கு 200 மில்லியன் தடுப்பூசிகளை உருவாக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. ஜி.எம்.பி மற்றும் உயிரியல்பாதுகாப்பு ஆகியவற்றின் கீழ், செயலற்ற வெரோ செல் பிளாட்ஃபார்ம் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்காக இந்த ஜி.எம்.பி. வசதி செயல்பட்டு வருகிறது என்று அந்நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தயாரிப்புகள் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் (அக்டோபர்) கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு ஆண்டுக்கு 700 மில்லியன் டோஸ்களை உருவாக்க ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதன்படி மாதத்திற்கு 58 மில்லியன் தடுப்பூசிகள் உருவாக்கப்படும். ஆனாலும் இன்னும் பயோடெக் நிறுவனம் தங்களின் உச்ச அளவை எட்டவில்லை. ஏப்ரல் மாதத்தில் 20 மில்லியன் தடுப்பூசிகளை உருவாக்கியது. மே மாதம் 30 முதல் 35 மில்லியன் தடுப்பூசிகளை உருவாக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ண எல்லா கூறினார்.


ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் இந்திய மக்களுக்கு கிடைக்கக்கூடிய கோவிட் -19 தடுப்பூசிகளின் அளவை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் இலக்குக்கு பாரத் பயோடெக்கின் கூடுதல் வசதி பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ள தடுப்பூசிகள் ஒன்றான பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் உற்பத்தியை அதிகரிக்க தற்போது நான்கு உற்பத்தியாளர்கள் முன்வந்துள்ளனர். மகாராஷ்டிராவின் ஹாஃப்கைன் பயோஃபார்மாசூட்டிகல் கார்ப்பரேஷன், மையத்தின் பாரத் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் கழகம், இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் ஆம்னிபிஆர்எக்ஸ் பயோடெக்னாலஜிஸ், ஹெஸ்டர் பயோ சயின்சஸ் மற்றும் குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் கூட்டமைப்பாகும்.

முதல் மூன்று நிறுவனங்களின் ஒத்துழைப்புகளின் விளைவாக, மே மாதத்தில் 30 மில்லியன் டோஸிலிருந்து நவம்பர் மாதத்திற்குள் கோவாக்சின் உற்பத்தி 135 மில்லியன் டோஸாக அதிகரிக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று இரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியா அளித்த விளக்க உரையில் உறுதியாகியுள்ளது. இதுமட்டுமன்றி கூடுதலாக குஜராத்தின் கன்சோர்ட்டியத்தின் விளைவாக 3-4 மாதங்களில் குஜராத்திற்கு கூடுதலாக 20 மில்லியன் டோஸ்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாக்ஸின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய நான்கு ஜெர்மன் நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக மாண்டவியா கூறியுள்ளார். மேலும் நான்கு நாடுகள் கோவாக்ஸின் உற்பத்திக்கு விருப்பம் தெரிவித்துள்ளன. உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் பாதியை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசியை சர்வதேச அளவில் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்படும்.

ஸ்வதேசி ஜாக்ரன் மான்ச் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய மாண்டவியா, எந்தவொரு நாடும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தயாரிக்க விரும்பினால், அவர்கள் அதை தயாரித்து 50 சதவீத உற்பத்தியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று நாங்கள் உலகுக்கு தெரிவிக்கின்றோம் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் ஜெர்மனியில் இருந்து விருப்பம் தெரிவித்த நிறுவனங்கள் குறித்த தகவல்களோ எவ்வளவு டோஸ்கள் உற்பத்தி செய்யும் என்பது குறித்தோ தெளிவான தரவுகள் கிடைக்கவில்லை.

source https://tamil.indianexpress.com/india/90-crore-doses-per-annum-bharat-biotech-says-covaxin-set-for-a-boost-305569/