சனி, 8 மே, 2021

கர்நாடகா மாநிலத்தில் தொடரும் மதவாதம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

 கர்நாடகா மாநிலத்தில் தொடரும் மதவாதம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

7.5.2021 பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவ மனையில் 212 மருத்துவர்களும், செவிலியர்களும் பணிபுரிகின்றனர்.
இதில் 17 பேர் முஸ்லிம்கள். தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் அதிக மருத்துவர்கள் மற்றும் செவிலியர் தேவைப்படுவதால் புதிதாக தேர்வு செய்துள்ளனர்.
பெங்களூரு பிஜேபி எம்பி தேஜஸ்வி சூர்யா வரிசையாக முஸ்லிம் பெயர்களை படித்து காண்பித்து 'இதெல்லாம் என்ன?
இவர்களுக்கு பணி நியமனம் செய்தது யார்?
அந்த ஏஜென்ஸியை கூப்பிடுங்கள். இது மதரஸாவா அல்லது கார்பரேஷனா?' என்று கேட்கிறார்.
200 பேரில் 17 பேர் முஸ்லிம்கள் பணிபுரிவதை கூட சங்கிகளால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. இது மத சார்பற்ற நாடு என்பதை மறந்து பேசுகிறார்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது என்பது சட்ட விதிகளை மீறுவதாகும்.
இவ்வாறு மருத்துவ துறையிலும் மதத்தை புகுத்தி மக்களை பிளவுபடுத்தப் பார்க்கும் சிந்தனை வேதனைக்குரியது.
நோயாளிகளை காக்க அரசும் தவறி விட்டது. இவ்வாறு ஆர்வமுடன் பணிபுரிய வரும் மருத்துவர்களை மதத்தை காட்டி தூரமாக்கினால் இறந்து போகும் உயிர்களுக்கு யார் பொறுப்பு?
மதம் பார்க்காமல் இறந்த சடலங்களை முஸ்லிம்கள் எடுத்து இறுதி காரியங்களை செய்து தருகின்றனர். ஆக்ஸிஜன் உதவிகளை செய்து, பள்ளிவாசல்களை மருத்துவ மனையாக மாற்றி தருவது என்று மனித நேயத்துடன் நடந்து வருகின்றனர்.
கொரோனாவால் இறக்கும் உயிர்களை சொந்தங்களே கைவிடும்போது முஸ்லிம்கள் தானே அனைத்தையும் செய்கின்றனர்.
பல அரபு நாடுகள் ஆக்சிஜன் உதவி புரிந்து வருகின்றது.
இப்படி பட்ட பேரிடர் நேரங்களிலும் மத வெறுப்பு அரசியல் நடத்தும் தேஜஸ்வி போன்றோர்களால் இந்தியா உலக அரங்கில் தலை குனிந்து நிற்கிறது.
இவர் மீது வழக்கு பதிந்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டு கொள்கிறோம்.
இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
-----------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------
Continued Religious Sectarianism based hatred speeches in Karnataka - Strong Condemnation by Tamil Nadu Thowheed Jamaath.
There are 212 Doctors and Nurses, working in the Government Hospital of Bangalore. Of these 212, around 17 are Muslims. Since the Corona cases and vulnerability are currently rising sky-high, more doctors and nurses are needed in the hospitals, so the hospitals started opting for additional workers in hospitals.
Bangalore BJP MP Tejaswi Surya visited the hospital, and started reading out the Muslim names in a row, and questioned, 'What is all this? Who hired them?
He also started to question the hiring agency, and questioned: "Is it a madrassa or a corporation?".
The Sanghis could not even accept the fact that the 17 Muslims out of 212 were selected to work, that too during this pandemic. Looks, he forgot to realize that this is a secular country.
It is a violation of the Indian law, for a Member of Parliament to speak out against the Sovereignty of the nation.
Thus, the thought of infiltrating religion in the Life Saving Medical Field during this pandemic, and trying to divide people religiously, is painful.
The government has also failed to protect the patients. If the doctors who come to work with such zeal are also turned away in the name of religion, not sure who will be responsible for the dying lives in the nation.
Irrespective of the religion, Muslims are voluntarily servicing needy families and individuals, to complete the last rights. Muslim communities throughout the nation, are doing oxygen aids, and turning mosques into hospitals, and this is what humanitarianism is all about.
Several Arab countries are providing generous oxygen aid to India.
Even in times of such pandemic and calamity, with the likes of Tejaswi who is running religious hatred-based politics, on the world stage, India looks ashamed with heads down.
Tamil Nadu Thowheed Jamaath urges the government to register the legal case for this act of Religious Sectarianism and ensure to take strong legal action.
Regards,
E. Muhammad,
General Secretary,
Tamil Nadu Thowheed Jamaath.