5 08 2021 தமிழ்நாட்டின் அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 15 பெட்ரோலிய ஆய்வு கிணறு தோண்ட ONGC நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி வில்சன் மாநிலங்களவையில், எண்ணெய் கிணறு தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி, இதை தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் 10 ஆய்வு கிணறுகளும், கடலூர் மாவட்டத்தில் 5 ஆய்வு கிணறுகளும் தோண்ட ONGC நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், இவை தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆவணங்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில சுற்றுசூழல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 2 பெட்ரோலிய கிணறுகளுக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி குறிப்பிட்டார்.
source https://news7tamil.live/ongc-plans-15-petroleum-wells-in-ariyalur-and-cuddalore-districts.html