தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றியமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.
12 08 2021 கொரோனா 2வது அலை பரவலின்போது தமிழ்நாடும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய கட்டணத்தை தமிழ்நாடு அரசு முறைப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டது.
தற்போது தொற்று பாதிப்பு குறைந்து தினசரி பாதிப்பு 2,000 என்ற அளவில்தான் உள்ளது. குறைந்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது.
அதன்படி, தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கான கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தீவிரமில்லாத ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3,000 கட்டணமாகவும், தீவிரமில்லாத ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு ரூ.7,000 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதேபோல வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என அரசாணையை வெளியிட்டுள்ளது மக்கள் நல்வாழ்வுத்துறை.
source https://news7tamil.live/private-hospitals-corona-treatment-fee-revised.html