12 08 2021
ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் கிரையொஜெனிக் எஞ்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக EOS-3 செயற்கைக்கோள் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ‘ஈஓஎஸ்-03’ (EOS-3) என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது. 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் நேற்று அதிகாலை தொடங்கியது. இன்று அதிகாலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில், ராக்கெட் எஞ்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் பயணம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. க்ரையோஜெனிக் எஞ்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் பயணம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/isros-gslv-fails-to-put-eos-3-technical-problem.html