05 08 2021
Manoj C G
Pegasus spyware issue : பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் ஒரு கட்டமைக்கப்பட்ட விவாதத்தை கோரி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க கோரிய விவசயத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிட எதிர்க்கட்சியினர் தயாராக இல்லை. இஸ்ரேல் நாட்டு நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி செயற்பாட்டாளார்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை வேண்டும் என்று கோரப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் இரண்டு அவைகளிலும் கடும் அமளியே நிலவியது.
பெகாசஸ் மற்றும் விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டோலா சென், முகமது நதிமுல் ஹக்கூ, அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், ஷாந்தா சேத்திரி, அர்பிதா கோஷ் மற்றும் மௌசம் நூர் ஆகியோரை நாடாளுமன்ற மேலவையில் இருந்து வெளியுறுமாறு மேலவைத் தலைவர் வெங்கய நாயுடு உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையில் அரசு 3 மசோதாக்களை மேலவையிலும், 2 மசோதாக்களை கீழ் அவையிலும் நிறைவேற்றியது.
டி.எம்.சி. உறுப்பினர்களை வெளியேற்றது, எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒரே அணியில் திரள வழி வகை செய்தது. அவர்களை அவையில் இருந்து வெளியேற கூறிய சமயத்தில், 15 எதிர்க்கட்சிகள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். பெகாசஸ் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் நாங்கள் அனைவரும் ஒன்றாகவும் உறுதியாகவும் நிற்கின்றோம் என்று கூறினார்கள். பேச்சுவார்த்தைக்கான முட்டுக்கட்டைகள் அரசாங்கத்தின் முன்பு உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெகாசஸ் தொடர்பாக 5 வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாளைக்கு முன்பு இவ்வாறு வலுவான போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளர் எதிர்க்கட்சியினர். மூத்த பத்திரிக்கையாளர்கள் என்.ராம், சசிகுமார், வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா, சி.பி.ஐ (எம்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், மற்றும் ஒட்டுக்கேட்பு பட்டியலில் இடம் பெற்றிருந்த ஊடகவியலாளர்கள் பரஞ்ஜோய் குகா தகுர்த்தா, எஸ்.என்.எம். அபிதி, ப்ரேம் ஷங்கர் ஜா, ருபேஷ் குமார் சிங் மற்றும் இப்ஸா சதக்ஷி மற்றும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். என். ராம் மற்றும் சசிகுமார் ஆகியோர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியன் எக்ஸ்பிரஸின் மூன்று ஆசிரியர்கள் பெயர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை கூடியதும் அவையில் குழப்பம் நிலவியது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோஷம்-முழக்கத்திற்கு மத்தியில், விவசாயிகளின் பிரச்சினை, பொருளாதார நிலை, விலை உயர்வு மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக நாயுடு கூறினார். அவையின் ”வெல்” பகுதியில் பதாகைகளுடன் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயர்கள் விதி 255-ன் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அவர்களின் இடத்திற்கு செல்லலாம். இல்லையென்றால் நீங்கள் நாள் முழுவதும் அவையில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று அவர் கூறினார்.
அவையின் “வெல்” பகுதியில் நுழைந்து. பதாகைகளுடன், மேலவைத் தலைவரின் பேச்சுக்கு கட்டுப்படாமல், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நபர்களின் பெயர்கள், அவைத் தலைவர் உத்தரவின் பெயரில் விதி 255-ன் கீழ் இணைக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற மேலவை செயலாளார் உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டு அவர்களை வெளியேறுமாறு அறிவித்தார். மேலும் இந்த நாளுக்கான அவையில் இந்த நபர்கள் இன்று இடம் பெற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான இந்த நிலைப்பாடு அவர்களை பிரிக்க பயன்படுத்தப்பட்டது என்று பலர் குற்றம் சாட்டினார்கள். விரக்தியடைந்த பாஜக எதிர்க்கட்சியை நாடாளுமன்றத்தில் பிரிக்க முயற்சிக்கிறது. நல்ல முயற்சி. ஆனால் நீங்கள் தோல்வியடைந்தீர்கள் என்று நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தேரக் ஓ’பிரையன் ட்வீட் செய்திருந்தார்.
அதனை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி கூட்டு அறிக்கை வெளியிட்டனர். அன்று காலை ராகுல் காந்தியின் காலை உணவு விருந்திற்கு செல்லாத ஆம் ஆத்மி கட்சியினரும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெகாசஸ் விவகாரம் குறித்து இரண்டு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியினர் ஒற்றுமையாக உறுதுணையாக நிற்கின்றனர் என்று தேசிய பாதுகாப்பு பரிணாமங்களை கொண்டுள்ள விவகாரம் என கூறிய உள்துறை அமைச்சருக்கு பதில் அளித்துள்ளனர். பெகாசஸ் விவகாரத்தை தொடர்ந்து, விவசாயிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்கள் குறித்த பிரச்சனைகளும் விவாதிக்கப்பட வெஏண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவாதம் தொடர்பான முட்டுக்கட்டைகள் அரசாங்கத்தின் வாசலில் உள்ளது. ஆணவமாகவும், கீழ்படிய மறுத்தலுமாகவும், இரண்டு அவைகளிலும் தெரிவிக்கப்பட்ட விசயம் ஒன்றில் விவாதங்கள் நடத்த எதிர்க்கட்சியினர் வைக்கும் கோரிக்கைகளை ஏற்க மறுப்பு தெரிவித்தும் வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் ஆனந்த ஷர்மா, தேசிய மாநாட்டு கட்சியின் ஷர்த் பவார், திமுகவின் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, எஸ்.பியின் ராம்கோபால் யாதவர், ஓ. பிரையான், சிவசேனாவின் சஞ்சய் ராவத், ஆர்.ஜே.டியின் மனோஜ் ஜா, சி.பி.எம். கட்சியின் எலமாரம் கரீம், ஆம் ஆத்மியின் சுஷில் குப்தா, ஆர்.எஸ்.பியின் என்.கே. பிரேமசந்திரன் ஆகியோர் கூட்டறிக்கையில் கையொப்பமிட்ட மேலவை உறுப்பினர்கள்.
இதே போன்ற அமளி மக்களவையிலும் ஏற்பட்டது. அதே நேரத்தில் நாடாளுமன்ற மேலவையில், Airports Economic Regulatory Authority of India (Amendment) Bill, 2021, the Limited Liability Partnership (Amendment) Bill, 2021 and the Deposit Insurance and Credit Guarantee Corporation (Amendment) Bill, 2021 போன்ற மசோதாக்கள் சிறு விவாதத்திற்கு பிறகு தாக்கல் செய்யப்பட்டது.
தேங்காய் மேம்பாட்டு வாரியம் (திருத்தம்) மசோதா, 2021 மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் அருகிலுள்ள பகுதிகள் காற்றின் தர மேலாண்மை ஆணையம் மசோதா ஆகியவற்றை மக்களவை நிறைவேற்றியது.
source https://tamil.indianexpress.com/india/pegasus-spyware-issue-stalls-parliament-again-comes-up-in-supreme-court-today-329389/