மரங்கள் வெட்டப்படுவதைத் தடுப்பதற்காக ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர், செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடெங்கும் சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. மரங்கள் வெட்டப் படுவதைத் தடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருந்தும் மரங்கள் வெட்டப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மரங்கள் வெட்டப் படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியில் இருந்து ரிஷிகேஷை, ஸ்ரீநகருடன் பாரி கர்வாலில் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 58-ன் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. இதற்காக தேசிய நெடுஞ் சாலையில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. ரிஷிகேஷில் 2 கி.மீ தூரத்தில் இருந்த 16 மரங்கள் சமீபத்தில் வெட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கூறி, ரிஷிகேஷை சேர்ந்த ஹேமந்த் குப்தா என்பவர் பல மனுக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி னார். வழக்கம்போல அவருக்கு எந்த பதிலும் வரவில்லை.
இதையடுத்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, ரிஷிகேஷில் உள்ள பெரிய மரம் ஒன்றில் தன்னைக் கயிறால் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறும்போது, ’தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்த வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம் மரங்களை பாதுகாக்கக மாற்று ஏற்பாடுகளை கண்டுபிடிக்க வேண்டும். புதிய மரங்களையும் அதிகமாக நடவேண்டும். இதற்காக எனது சொந்த பணத்தையும் செலவழிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்றார்.
இதையடுத்து அங்கு தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்.
source https://news7tamil.live/retd-govt-bank-employee-ties-himself-to-tree-to-protest-felling.html