செவ்வாய், 7 செப்டம்பர், 2021

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை?

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் இடங்கள்…

05.09.2021

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

06.09.2021

வட உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07.09.2021 முதல் 09.07.2021

வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகப்பட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஒரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகப்பட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு

வால்பாறை, பேராவூரணி தலா 5 செ.மீ, சின்னக்கல்லூர் (கோவை), ஆலங்குடி (புதுக்கோட்டை) தலா 4 செ.மீ, மதுக்கூர், முத்துப்பேட்டை, பரமக்குடி தலா 3 செ.மீ

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன் காரணமாக

05.09.2021

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

05.09.2021 முதல் 06.09.2021

மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

06.90.2021

ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல், வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

05.09.2021 முதல் 09.09.2021 வரை

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-weather-forecast-for-next-4-days-these-districts-gets-heavy-rain-338962/

Related Posts: