பத்திரிக்கை அறிக்கை
04/09/2021
பெண்களின் கற்பையும், உயிரையும் பாதுகாக்க வக்கற்ற அமித்ஷா பதவி விலக வேண்டும்!
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு(NTF) பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை
மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் அரக்கச் செயல் டெல்லி, சங்கம் விஹார் என்ற இடத்தில் நடந்துள்ளது.
டெல்லி காவல்துறை பாதுகாப்பு படையில் பணிக்கு சேர்ந்து சில நாட்களே ஆன நிலையில், சென்ற 27/08/2021 அன்று 21 வயதுள்ள சபியா என்னும் யுவதி 4 பேர் கொண்ட மனித மிருகங்களால் கொடூரமான கூட்டு பாலியலுக்கு ஆளாகி இருக்கிறார்.
ஈவு இரக்கமற்ற முறையில் அவரது மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டுள்ளன. உடல் முழுவதும் 50க்கு மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தியும், வெட்டியும் சபியா கூறுபோடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
மனிதப் பண்புகளுக்கு அப்பாற்பட்ட காட்டுமிராண்டிகள் கூட இத்தகைய வக்கிரத்தையும், வன்கொடுமைகளையும் நிகழ்த்தத் துணியமாட்டார்கள்.
கொஞ்சமும் நெஞ்சில் ஈரமுள்ள எவரும் இந்தக் கொடூர அரக்கச் செயலை கண்டிக்காமல் இருக்க முடியாது. இந்த மனித மிருகங்கள் கடுமையான சட்டத்தின் மூலம் கருவறுக்கப்பட வேண்டும் என்பதிலும் மனிதர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆகஸ்ட் 27 அன்று பணிக்குச் சென்ற தனது மகள் வீட்டுக்கு திரும்பாததால் பதறிப்போன சபியாவின் பெற்றோர்கள், காவல்துறை, கலெக்டர் அலுவலகம் என அலைந்து முறையிட்டும் அவர்களின் அழுகுரல் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் பயிலும் பெண்களானாலும், பணிபுரியும் பெண்களானாலும் ஏன்? பாதுகாப்புத் துறையில் பயணிக்கும் பெண்களானாலும், அவர்கள் கற்புக்கோ, உயிருக்கோ உத்தரவாதம் இல்லாத நிலை நாட்டில் நிலவுவதை- குறிப்பாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் டெல்லியில் அடிக்கடி நிகழ்வதை நாட்டு மக்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
இதே டெல்லியில் இரவில் பேருந்தில் பயணித்த நிர்பயா என்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் உடனடியாக ஊடக வெளிச்சத்திற்கு வந்தது. நாடே கொந்தளித்தது. நாட்டின் அனைத்து ஊடகங்களும் பல நாட்கள் நிர்பயா குறித்தே விவாதக் களங்களை அமைத்து உலகின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்தன.
நிர்பயாவுக்கு நிகழ்ந்ததைவிட பல மடங்கு கொடூரம் சபியாவுக்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆனால் சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் இந்தக் கொடூரம் வெளி உலகிற்கு தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஊடகங்கள் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் தடவும் போக்கை தொடர்ந்து செய்து வருகின்றன. ஊடக அறத்திற்கு ஊறு விளைவித்து வருகின்றன. இது மிகவும் ஆபத்தானது என்பதை உணர்த்துகிறோம்.
தலைநகரில் பெண்களின் கற்பையும் உயிரையும் பாதுகாக்க வக்கற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்.
சபியாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
இவண்
ஏ.எஸ்.அலாவுதீன்
பொதுச்செயலாளர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
Source : FB/ NTF
https://www.facebook.com/jafar.ali.1232?__cft__[0]=AZUyP1B5tNcnGiBf1y4q9fkA58tp0mx5-IvU10Uo8owv3U4BG_bYtpU8LuAlpGbCAQXkkJRGeNtDbQbr10Jz25Ax0F8z-prz48K0zRII6hn3yV3k12bmY6rgTHA9psU2DdHOCNr_3kx9w8yFxZesDAaM4ehzhXkhYVBw6fTy8qtzvQ&__tn__=-UC%2CP-R