புதன், 20 ஜூலை, 2022

தினமும் 3 பேரிச்சம்பழம்… சுகர் பிரச்னையை சமாளிக்க எப்படி உதவுகிறது?

 

ஆரோக்கியமான வாழின் மீது தற்போது எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சர்க்கரை நோயாளிகளின் வாழ்வில் சர்க்கரைக்கு இடம் இல்லை என்பதால், அவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றமாக பேரிச்சம்பழம் இருக்கிறது. இரும்பு சத்து நிறைந்த பேரிச்சம்பழம் அனைவருக்கும் ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் அதை சாப்பிடலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

100 கிராம் பேரிச்சம்பழத்தில் 312 கலோரிகள் இருக்கிறது. 2 அல்லது 3 பேரிச்சம்பழம் சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அதிகரிக்காது.

மேலும் சுகர் நோயாளிகள், பேரிச்சம்பழத்தை நட்ஸ்-வுடன் சேர்த்து சாப்பிடலாம். மேலும் ஆரோக்கியமான உணவுகளுடன் இதை சேர்த்து சாப்பிடுவதால், அதிக பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் உடல் பருமன் ஏற்படமாமல் தடுக்கும். எனினும் இது பலராலும் நடைமுறையில் சொல்லப்படும் ஒரு தகவல் மட்டுமே. சரியான முழுமையான உடல் நலன் தொடர்பான பிரச்சனை தீர உங்கள் மருத்துவர் தரும் தகவல்களே மிகச் சரியானவையாக இருக்கும்.  

source https://tamil.indianexpress.com/food/dates-good-for-diabetes-patients-481538/