சனி, 9 ஜூலை, 2022

தமிழகத்தின் ‘டாப்’ பொறியியல் கல்லூரிகள் எவை? அண்ணா பல்கலை. அதிகாரபூர்வ பட்டியல்

 

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது.

இந்த தரவரிசைப்பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல் கல்லூரி முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக்கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தற்போது வெளியிடப்பட்டுள்ள கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை பார்த்து தங்கள் கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழம் வெளியிட்ட டாப் 10 கல்லூரிகளை பார்க்கலாம்

1)கிண்டி பொறியியல் கல்லூரி

2) எம்ஐடி  மெட்ராஸ் குரேம்பேட்டை / குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரி

3) கோவை பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி

4) ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, சென்னை, ஓஎம்ஆர்

5) கோவை இன்ஸ்டிடியூட்  ஆப் டெக்னாலஜி

6) தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை

7) கவர்மெண்ட் காலேஜ் அப் டெக்னாலஜி கோவை

8) கோவை இன்ஸ்டிடியூட்  ஆப் டெக்னாலஜி மற்றும் அப்லைடு ரிசர்ச்

9) ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, சென்னை

10) கோவை குமரகுரு காலேஜ் ஆப் டெக்னாலஜி, கோவை

தரவரிசை பட்டியலை செக் செய்வது எப்படி ?

அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகார்ப்பூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும். https://www.annauniv.edu/nwsnew/ என்ற இணையதளத்திற்கு சென்ற பிறகு தரவரிசை பட்டியலுக்கான அறிவிப்பு தொடர்பான செய்தி வெளியிடப்பட்டிருக்கும் .அதை கிளிக் செய்து உள்ளே நுழைந்தால், முழு பட்டிலையும் தரவிரக்கம் செய்யலாம். 

source https://tamil.indianexpress.com/education-jobs/anna-universitys-latest-rank-list-476626/

Related Posts: