30 1 2022
நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டை (PAN) ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30ம் தேதியாக இன்று ஆகும். அவ்வாறு செய்யத் தவறினால் ஜூலை 1 முதல் ரூ.1,000 இரட்டை அபராதம் விதிக்கப்படும். மத்திய அரசு ஏற்கனவே மார்ச் 31 வரை காலக்கெடுவை நீட்டித்த நிலையில், அதன் பிறகு, மார்ச் 31 மற்றும் ஜூன் 30, 2022 க்குள் பான் மற்றும் ஆதாரை இணைப்பவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது.
மேலும், தாமதக் கட்டணத்தை அல்லது அபார கட்டணத்தைச் செலுத்திய 4-5 நாட்களுக்குப் பிறகு ஆன்லைனில் இணைக்கும் செயல்முறையைச் செய்யலாம் என்று குறிப்பிட்டு இருந்தது.
பான் ஆதார் இணைப்பு தொடங்கியது. 30/06/22 வரை இணைக்கப்பட்டிருந்தால் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும், இல்லையெனில் கட்டணம் ரூ.1,000. மேஜர் ஹெட் 0021 (நிறுவனங்களைத் தவிர மற்ற வருமான வரி) & மைனர் ஹெட் 500 (கட்டணம்) உடன் Challan No ITNS 280 மூலம் செலுத்த வேண்டிய கட்டணம். பணம் செலுத்திய நாளிலிருந்து 4-5 வேலை நாட்களுக்குப் பிறகு இணைக்க முயற்சிக்கவும், ”என்று கடந்த ஜூன் 1 அன்று மத்திய அரசு சார்பில் பதிவிட்டப்பட்ட ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
போர்ட்டல் வழியாக பான்-ஆதாரை இணைப்பது எப்படி?
முதலில் வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலைத் திறக்கவும்- https://incometaxindiaefiling.gov.in/
பின்னர் போர்ட்டலில் பதிவு செய்யவும். பான் எண் பயனர் ஐடியாக இருக்கும்.
உங்கள் பயனர் ஐடி, கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு போர்ட்டலில் உள்நுழையவும்.
ஒரு பாப்-அப் சாளரம் தோன்றும், உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும்படி கேட்கும்.
சாளரம் தோன்றவில்லை என்றால், மெனு பட்டியில் உள்ள ‘சுயவிவர அமைப்புகள்’ ‘Profile Settings’ என்பதற்குச் சென்று, ‘லிங்க் ஆதார்’ ‘Link Aadhaar’ என்பதைக் கிளிக் செய்யவும்.
பான் கார்டு விவரங்களின்படி பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற தகவல்கள் ஏற்கனவே குறிப்பிடப்படும்.
ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் கொண்டு திரையில் பான் விவரங்களைச் சரிபார்க்கவும்.
பொருத்தமின்மை இருந்தால், ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சரி செய்ய வேண்டும்.
விவரங்கள் பொருந்தினால், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, “இப்போது இணைப்பு” “link now” பொத்தானைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஆதார் உங்கள் பான் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு பாப்-அப் செய்தி உங்களுக்குத் தெரிவிக்கும்.
பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் மற்ற முறைகள்:
இணைப்புச் செயல்முறைக்கு பின்வரும் இணையதளங்களையும் பார்வையிடலாம்- https://www.utiitsl.com/ மற்றும் https://www.egov-nsdl.co.in/
SMS மூலம்: பின்வரும் செய்தி UIDPAN<12 இலக்க ஆதார்> 10 இலக்க PAN> என தட்டச்சு செய்யவும். செய்தியை 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு அனுப்பலாம்.
அருகிலுள்ள PAN சேவை மையங்களைப் பார்வையிடுதல்: இணைக்கும் செயல்முறையை அருகிலுள்ள PAN சேவை மையத்திற்குச் சென்று கைமுறையாகச் செய்யலாம். ‘இணைப்பு-I’ என பெயரிடப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து, பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையின் நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும். இது கட்டணச் சேவையாக இருக்கும்.
source https://tamil.indianexpress.com/business/aadhaar-pan-link-deadline-ends-today-rs-1000-penalty-from-july-1-heres-how-to-link-it-472960/