போதையின் தலைநகரமாக காசி தான் இருக்கிறது பிரதமருக்கு அது தெரியவில்லை என திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ( DYFI ) போதையற்ற தமிழ்நாடு – ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் நிறைவு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திரைப்பட இயக்குனர் ராஜூ முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் பேசியதாவது:
போதையை ஒழிக்க சட்டம் போட்டு தடுக்கும் கூட்டமும்,மற்றொரு பக்கம் திட்டம் போட்டு திருடும் கூட்டமும் இருக்கிறது என்று சொன்னால் இங்கே சட்டம் போடும் கூட்டமும், திருடும் கூட்டமும் ஒன்று தான்.
மது ஆலைகளை நடத்துபவர்கள்,போதை மாஃபியாக்கள் பின்னாடி இருப்பவர்கள் எல்லாம் ஆட்சியாளர்கள் தான். போதை, போதை என்கிறார்கள் போதையின் தலைநகரமாக காசி தான் இருக்கிறது பிரதமருக்கு அது தெரியவில்லை. இவ்வாறு திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் பேசினார்.
source https://news7tamil.live/kashi-is-the-drug-capital-fffilm-director-raju-murugan-speech.html