/indian-express-tamil/media/media_files/2026/05/18/child-2026-05-18-20-16-42.jpg)
சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை இனி வாட்ஸ் அப் செயலி மூலம் எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் செயலி மூலம் எப்படி பெறலாம்?
- மாநகராட்சியின் இந்த புதிய தானியங்கி வாட்ஸ் அப் சேவை மூலம் மிக எளிதாகச் சான்றிதழைப் பெறலாம். பெற்றோர் தங்களது மொபைல் போனில் 94450 61913 என்ற சென்னை மாநகராட்சியின் பிரத்யேக வாட்ஸ் அப் உதவி மைய எண்ணைச் சேமித்துக் கொள்ள வேண்டும்.
- அந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் இருந்து ’ஹாய்’, ‘வணக்கம்’ அல்லது ‘பிறப்பு சான்றிதழ்’ என தகவல் அனுப்பித் தங்களது கோரிக்கையைப் பதிவு செய்ய வேண்டும்.
- பெற்றோர் தங்களது விவரங்களை உள்ளிட்ட சில நொடிகளிலேயே, அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் போனுக்கு பி.டி.எஃப் வடிவில் தானாகவே பிறப்புச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.
- இதனைப் பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-people-get-birth-certificate-on-whatsapp-read-full-story-11848703





