செவ்வாய், 19 மே, 2026

சென்னை ஐ.ஐ.டி. புதிய அறிவிப்பு: ஆன்லைன் எம்.டெக் படிப்புகளுக்கு உடனே விண்ணப்பியுங்க: மே 31 கடைசி நாள்

 

சென்னை ஐ.ஐ.டி. புதிய அறிவிப்பு: ஆன்லைன் எம்.டெக் படிப்புகளுக்கு உடனே விண்ணப்பியுங்க: மே 31 கடைசி நாள்

IIT Madras Web MTech admissions 2026 IIT Madras artificial intelligence PG diploma

IIT Madras Web MTech admissions 2026 | IIT Madras artificial intelligence PG diploma

சென்னை ஐ.ஐ.டி., பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் இளம் பட்டதாரிகள் தங்களின் உயர் கல்வியைத் தொடரும் வகையில், ஆன்லைன் வழியிலான (Web-enabled) எம்.டெக் (MTech) மற்றும் முதுகலை டிப்ளமோ (PG Diploma) படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவைத் தொடங்கியுள்ளது.

இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 31, 2026 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31, 2026

நுழைவுத் தேர்வுகள்: ஜூன் மற்றும் ஜூலை 2026

வகுப்புகள் தொடக்கம்: ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2026


கல்வித் தகுதி:

எம்.டெக் படிப்புக்கு தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டத்துடன், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.


பிஜி டிப்ளமோ படிப்புக்கு பணி அனுபவம் இல்லாத இளம் பட்டதாரிகளும் (Freshers) விண்ணப்பிக்கலாம். தொடர்புடைய கல்விப் பின்னணி கொண்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த ஆன்லைன் வழி முதுகலை திட்டத்தின் கீழ் பின்வரும் பொறியியல் துறைகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன:

விண்வெளி பொறியியல் (Aerospace Engineering)

இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering)

மின் பொறியியல் (Electrical Engineering)

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)

கணினி அறிவியல் பொறியியல் (Computer Science Engineering)

இ-மொபிலிட்டி (E-Mobility)

செயல்முறை பாதுகாப்பு மற்றும் உற்பத்தி பகுப்பாய்வு (Process Safety and Manufacturing Analytics)

விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதிக்கு ஏற்ப எம்.டெக் அல்லது பிஜி டிப்ளமோ படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். பின்னர் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் டிப்ளமோ படிப்பிலிருந்து எம்.டெக் படிப்பிற்கு மாறிக் கொள்ளும் வசதியும் உண்டு.

மாணவர்கள் முதலில் பிஜி டிப்ளமோவில் சேர்ந்து, அதை வெற்றிகரமாக முடிக்கலாம் அல்லது எம்.டெக் பட்டமாக மேம்படுத்திக் கொள்ளலாம். பணிபுரியும் வல்லுநர்கள் தங்களின் வேலையைத் தொடர்ந்துகொண்டே நேரடியாக எம்.டெக் படிப்பில் சேர முடியும்.

தேர்வு முறை எப்படி இருக்கும்?

இந்த ஆன்லைன் எம்.டெக் திட்டத்தில், மாணவர்களின் திறன் அசைன்மென்ட்டுகள், தொடர் மதிப்பீடுகள் மற்றும் ஆன்லைன் கண்காணிப்பு தேர்வுகள் (Remote-proctored exams) மூலம் மதிப்பிடப்படும். இருப்பினும், இறுதிப் பருவத் தேர்வுகள் (End-semester examinations) இந்தியா முழுவதும் உள்ள குறிப்பிட்ட தேர்வு மையங்களில் நேரடியாக நடத்தப்படும்.

தற்போது, சுமார் 1,200 மாணவர்கள் இந்த வெப்-எம்.டெக் திட்டங்களில் படித்து வருகின்றனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் தங்களின் பணியைத் தொடர்ந்துகொண்டே ஐஐடி மெட்ராஸில் எம்.டெக் பட்டம் பெற்றுத் தேர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி. டீன் (கல்விப் படிப்புகள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறுகையில், "இந்த பாடத்திட்டங்களின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், இது புராஜெக்ட் சார்ந்த கற்றலுக்கு (Project-based learning) அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் பணியிடங்களிலும் தொழில்துறைகளிலும் எதிர்கொள்ளும் நிஜ உலக சவால்களோடு தங்களது கல்வியை ஒப்பிட்டுப் படிக்க முடியும்" என்றார். 


source https://tamil.indianexpress.com/education-jobs/iit-madras-web-mtech-admissions-2026-iit-madras-artificial-intelligence-pg-diploma-11847827