வெள்ளி, 15 மே, 2026

நீட் மறுதேர்வு எப்போது? தேதியை அறிவித்த தேசிய தேர்வு முகமை

 NEET UG 2026 re-exam Official Date OUT:  மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு மே 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை இதுவரை இல்லாத வகையில் 22.80 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினர். கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80 சதவீதத்துக்கும் கூடுதலான வினாக்கள் தேர்வுக்கு பல நாள்கள் முன்பே ராஜஸ்தானில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு மே 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை இதுவரை இல்லாத வகையில் 22.80 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினர். கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80 சதவீதத்துக்கும் கூடுதலான வினாக்கள் தேர்வுக்கு பல நாள்கள் முன்பே ராஜஸ்தானில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரையடுத்து, கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை (மே.12) தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அறிவித்தது. தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய முகமைகள் இணைந்து ஆய்வு செய்த தகவல்கள், அத்துடன் சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளால் பகிரப்பட்ட விசாரணை முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான தேர்வுகளை நியாயமான, பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த முறையில் நடத்துவதில் தங்களுக்குள்ள உறுதியை மீண்டும் வலியுறுத்தும் வகையில், தேசிய தேர்வு முகமை முன்னதாக மே 8-ஆம் தேதியன்று இம்முழு விவகாரத்தையும், சுயாதீனமான சரிபார்ப்பு மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக மத்திய முகமைகளுக்குப் பரிந்துரைத்திருந்தது.

மத்திய அரசின் ஒப்புதலுடன், இத்தேர்வு தனியாக அறிவிக்கப்படவுள்ள தேதிகளில் மீண்டும் நடத்தப்படும் என்பதை தேசிய தேர்வு முகமை உறுதி செய்தது. இந்த நடவடிக்கை, "வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும், தேர்வு முறையின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது" என்று தேசிய தேர்வு முகமை வலியுறுத்தியும், மறு தேர்வு கால அட்டவணை தொடர்பான கூடுதல் அறிவிப்புகளுக்காக, தேர்வர்கள், பெற்றோர்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினர்கள் காத்திருக்குமாறு அறிவுறுத்தி இருந்தது. 

இந்த நிலையில், நாடு முழுவதும் நீட் மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், ஹால் டிக்கெட், வழிகாட்டுதல்கள் என்.டி.ஏ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருக்கிறது. 



source https://tamil.indianexpress.com/education-jobs/neet-ug-2026-rescheduled-on-june-21-after-exam-cancelled-due-to-paper-leaks-tamil-news-11836878