source https://tamil.indianexpress.com/international/malaysia-introduce-new-immigration-system-to-reduce-airport-queues-11844292
பழைய முறை டூ புதிய முறை
பழைய முறை
கடந்த 20 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த இந்த முறையில், பயணிகள் முதலில் தங்களின் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பிறகு, கைரேகை மற்றும் முக ஸ்கேன் மூலம் பயோமெட்ரிக் சரிபார்ப்பு நடக்கும். இதற்கு அதிக நேரம் எடுத்தது.
புதிய முறை
சுமார் 100 கோடி மலேசிய ரிங்கிட், அதாவது சுமார் 255 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பு, முக அங்கீகார தொழில்நுட்பம், கியூ.ஆர் கோடுகள் மற்றும் பாஸ்போர்ட் சரிபார்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுகிறது. இது பயணியின் முகத்தையும் அவர்களின் பயண விவரங்களையும் டிஜிட்டல் பதிவுகளுடன் மிக வேகமாக ஒப்பிட்டுப் பார்த்து அனுமதியை வழங்கிவிடுகிறது.
சுங்கச் சோதனையிலும் மாற்றம்
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காகச் சுங்கச் சோதனையில் தனித்தனி வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வரி செலுத்த வேண்டிய அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதையும் வைத்திருக்காத பயணிகள் ’நத்திங் டூ டிக்ளர்’ (Nothing to Declare) வழித்தடத்தைப் பயன்படுத்தி வேகமாக வெளியேறலாம். சுங்க அதிகாரிகளிடம் அறிவிக்க வேண்டிய மற்றும் வரி செலுத்த வேண்டிய பொருட்கள் வைத்துள்ள பயணிகள் ‘குட்ஸ் டூ டிக்ளர்’ (Goods to Declare) வழியைப் பயன்படுத்த வேண்டும்.





