/indian-express-tamil/media/media_files/2026/05/23/covai-2026-05-23-09-48-20.jpg)
கரூர் மாவட்டம் கடவூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த விவசாயி ஒருவரை, மர்ம நபர்கள் நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வளையப்பட்டியைச் சேர்ந்த கருணாகிரி என்ற விவசாயி, தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரை நோக்கி நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதலில் அவரது முதுகில் சுமார் 10 குண்டுகள் பாய்ந்தன.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சரிந்த கருணாகிரியை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். விவசாயி கருணாகிரியை நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள் யார், எந்த காரணத்திற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது, முன்விரோதம் ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் விவசாயி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/farmer-shot-with-country-gun-near-karur-intensely-treated-with-10-bullets-lodged-in-back-11864923





