3 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் திடீர் ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்சமயம் 230 ஆக குறையும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த முதலமைச்சர் விஜய் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களும் சபாநாயகரால் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டால், தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் 4 தொகுதிகள் (திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை) காலியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் தமிழக அரசியல் களம் தற்சமயம் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-city-news-live-updates-11870540





