நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்: கடலுக்கு அடியில் ஈரானின் போர் தந்திரம்; அமெரிக்காவை தாக்கும் டால்பின் படை
/indian-express-tamil/media/media_files/2026/05/09/iran-2026-05-09-18-08-16.jpg)
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த போரில் ஈரானில் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உட்பட அதிகாரிகள் மற்றும் மக்கள் என பலர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதையடுத்து, தற்போது ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் தொடர்ந்து முயன்று வருகிறது.
ஈரான் வசம் உள்ளா ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை இறுக்கமாகி வரும் நிலையில், அதை முறியடிக்க ஈரான் ஒரு விசித்திரமான மற்றும் ஆபத்தான உத்தியைக் கையில் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்க்களத்தில் யாரும் எதிர்பாராத அதிரடித் தாக்குதல்களை நடத்துவதில் கில்லாடியான ஈரான், இம்முறை இயற்கையைத் தனது ஆயுதமாக மாற்றத் துணிந்துள்ளது.
டால்பின்களும் தற்கொலைத் தாக்குதலும்
'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரான் தனது கடற்படையில் பயிற்சி பெற்ற டால்பின்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது ஈரானுக்குப் புதிய விஷயம் அல்ல. கடந்த 2000-ஆம் ஆண்டிலேயே சோவியத் யூனியனிடம் இருந்து இத்தகைய விலங்குகளை ஈரான் வாங்கியதாக பிபிசி ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த டால்பின்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சிகள் அதிர வைக்கின்றன.
கண்ணிவெடிகள்
எதிரிக் கப்பல்களைக் கண்டறிந்து அவற்றின் மீது கண்ணிவெடிகளைப் பொருத்துதல். தனது முதுகில் வெடிமருந்துகளைச் சுமந்து சென்று, எதிரிக் கப்பல்கள் மீது மோதி தற்கொலைத் தாக்குதல் நடத்துதல். கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் வீரர்களைக் கண்டறிந்து தாக்குதல் நடத்துதல் போன்ற பயிற்சிகள் இந்த டால்பின்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏன் இந்த விசித்திர முடிவு?
அமெரிக்காவின் தொடர் முற்றுகையால் ஈரானின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இனியும் அமைதியாக இருந்து அழிவதை விட, ஒருமுறை மோதிப் பார்ப்பதே மேல் என்ற மனநிலைக்கு ஈரான் வந்துள்ளதாக ராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நவீன ரேடார்களால் கூட எளிதில் கண்டுபிடிக்க முடியாத இந்த 'உயிருள்ள ஆயுதங்கள்' அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
09 5 2026





