திங்கள், 9 நவம்பர், 2015

இந்தியாவின் முதல் சூரிய ஒளி வாகன

L Boopathiraj Karaikudi's photo.

ஆம் நான் உருவாக்கி உள்ள இந்தியாவின்
முதல் சூரிய ஒளி வாகனத்தில் இதுல மூன்று
அல்லது ஐந்து பேர் பயணிக்கலாம் மணிக்கு முப்பது
கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது இது
சூரிய ஒளி மூலம் காலையில் இருந்து மாலைவெயில்
இருக்கும்வரை ஓடக்கூடியது இதில் அதிக சக்தி வாய்ந்த இரண்டு
500 WATTS B L DC மோட்டார்கள் இணைக்க பட்டுள்ளது
மற்றும் அதிக திறன் கொடுக்கும் LEAD ACID பாட்டரிகள்
150 WATTS சூரியஒளி மின்தகடுகள் மேற்கூரையாக
அமைத்துள்ளேன் இதன் மூலம் நல்ல வெயில் காலங்களில்
வெப்பம் நம்மை தாக்காது காரணம் இதில் அமைத்துள்ள
இன்சுலடேர்கள் மற்றும் இதனை வீட்டு மின்சாரத்திலும்
சார்ஜ் செய்து கொள்ளமுடியும் அதே போல் வண்டி ஓடாதபோது
வண்டியை வீட்டின் அருகில் நிறுத்தி வண்டியில்
இருந்து மின்சாரத்தை வீட்டிற்கு பயன் படுத்தி கொள்ளலாம்
விளக்குகள் பேன் டிவி கம்பியுட்டர் laptop மற்றும்
தொலை தொடர்பு சாதனங்களை பயன் படுத்தலாம்
அல்லது விவசாய நிலங்களுக்கு ஸ்பெஷல் பம்புகள் மூலம் நீர்
இறைத்து பயன் படுத்தலாம்
வண்டியின் நீளம் ............2 meter
வண்டியின்அகலம்...........1.5 meter
தரையில் இருந்து........... 350 mm
சிறந்த ப்ரேக் சிஸ்டம் உள்ளது
பாட்டரி 36 volt
சூரிய ஒளி மின் தகடு 36 volt 150 வாட்ஸ்
solar சார்ஜ் கண்ட்ரோலர்
இந்த வாகனம் ஓடும் போது புகை கிடையாது இதனால்
சுற்று சூழல் பாதிக்காது வாகனத்தின் மொத்த எடை
280 கிலோ மட்டுமே
வாழ்க நலமுடன்
உங்கள் கேள்விக்கு பதில் தருகிறேன்
எங்கே மீண்டும் ஒரு கைதட்டுங்க நண்பர்களே
தீபாவளி நல் வாழ்த்துக்கள்
லி.பூபதிராஜ் ...காரைக்குடி
08.11.2015