“(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.
இத்தகையவர்கள்தாம் தங்கள் இறைவனின் வசனங்களையும் அவனைச் சந்திப்போம் என்பதையும் நிராகரித்து விட்டவர்கள். அவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. (நன்மை, தீமையை நிறுக்க) அவர்களுக்காக மறுமை நாளில் எடைக் கோலையும் நாம் நிறுத்தமாட்டோம்.
அவர்கள் நம்முடைய வசனங்களையும், நம்முடைய தூதர்களையும் நிராகரித்து பரிகாசமாக எடுத்துக் கொண்டதன் காரணமாக நரகமே அவர்களுக்குக் கூலியாகும்.
(அல்குர்ஆன்: 18:103-106)
(அல்குர்ஆன்: 18:103-106)