வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 24 பொருட்கள் மாயம்! என்ன செய்கிறது தொல்லியல் துறை?

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 24 பொருட்கள் மாயமாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 24 பொருட்கள் மாயம்! என்ன செய்கிறது தொல்லியல் துறை?

இந்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள், பழங்கால எலும்புகள் உள்ளிட்ட 24 பொருட்கள் மாயமானதாக மக்களவையில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

வரலாற்றுக்கு முற்பட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த பெருங்கற்கால கற்கள், உத்தரபிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கற்களில் எழுதப்பட்ட எழுத்துருக்கள், இடிந்திருந்த பௌத்த மற்றும் இந்து மத கோவில்களின் முக்கிய பொருட்கள், அசாம் மாநிலத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் அரசர் ஷெர் ஷாவின் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த துப்பாக்கி, பழங்காலத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் எலும்புகள் உள்ளிட்ட பொருட்கள் மாயமாகி உள்ளன.

மாயமான 24 பொருட்களில் 11 பொருட்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து காணாமல் போயியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”பழைய ஆவணப் பதிவுகள், வருவாய் படங்கள், பதிப்பிக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மாயமான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது” என கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா மக்களவையில் தெரிவித்தார்.

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் தனிநபர்கள் கட்டுமானங்களை அமைக்காத வகையில் செயற்கைக்கோள்களின் உதவியுடன் கண்காணிக்க இஸ்ரோவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் மகேஷ் சர்மா குறிப்பிட்டார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 3,686 நினைவிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை இஸ்ரோ கண்காணித்து வருவதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர், மதன்மோகன் மாளவியா, துவாரகநாத் கோட்னிஸ் உள்ளிட்டோர் பிறந்த இடங்கள், பழமைவாய்ந்த பௌத்த, இந்துமத கோவில்கள் உள்ளிட்ட 17 இடங்களை பாதுகாக்கவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 
http://ns7.tv/ta/24-indian-monuments-are-missing-%E2%80%93-and-nearly-half-them-are-uttar-pradesh.html