Airtel customer care எண்களாக இணையத்தில் காணக்கிடைப்பவைகளில் சில உங்களை பாஜக உறுப்பினராக்கக் கூடும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
2014ல் பாஜக தனது தீவிர உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியது. விளைவு, உலகில் உள்ள அரசியல் கட்சிகளில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற சிறப்பை பெறும் வகையில் அதிக உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இணைத்ததாக பாஜக அறிவித்தது. தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளேயான பாஜக, 80 ஆண்டுகள் செயல்பாட்டிலுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியை விட 1.3 மில்லியன் வாக்காளர்களை அதிகம் சேர்த்து அதிர்ச்சி அளித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் உலகின் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
2014ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 35 மில்லியன் உறுப்பினர்களை கொண்டதாக கருதப்பட்ட பாஜக, இணையம் மற்றும் Missed Call மூலம் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட திட்டங்களை ஆரம்பித்ததன் மூலம், அடுத்த 5 மாதங்களில் 50 மில்லியன் உறுப்பினர்களை கட்சியில் சேர்த்ததாக அறிவித்தது.
பாஜகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்ததை அடுத்து பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்கள் எழுந்தது. அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதனை விமர்சித்தனர். பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் தில்லுமுல்லு செய்தே உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், The Wire இணையதள செய்தி நிறுவனம், புலனாய்வு செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதில், இணையத்தில் Airtel customer care எண்களாக காணப்படுபவைகளில் சிலவற்றை அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்துவதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
Google-ல் Airtel customer care எண் என தேடும் போது ‘customercarenumbers.in’, ‘icustomercare.in’ உள்ளிட்ட இணைய தளங்களில் கிடைக்கக் கூடிய post-paid மற்றும் pre-paid எண்களுக்கான toll-free தொடர்பு எண்களில் ஒன்று 1800-103-4444. இந்த எண்ணிற்கு நீங்கள் தொடர்பு கொண்டால் பா.ஜ.கவின் உறுப்பினராவதற்கான செயல்பாட்டில் உங்களை கொண்டு செல்லும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
இணையத்தில் தேடும் போது உடனடியாக கிடைக்கக் கூடிய இத்தகைய வலைதளங்கள் Airtel Customer எண்களுடன் போலியான எண்ணையும் அளிக்கின்றன. Toll-Free எண்களாக கூறப்படும் 1800-103-4444 எண்ணுக்கு அழைக்கும் போது, சில கணங்கள் ரிங் ஒலித்ததற்கு பிறகு அழைப்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. பின்னர் +918220483241 என்ற எண்ணில் இருந்து “பா.ஜ.கவில் இணைய 1800-266-2020 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்” தமிழில் SMS வருவதை "The Wire" நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது. தமிழ்மொழி அறியாத பிற மாநிலத்தவர்கள் Airtel customer care எண் என நினைத்து தொடர்பு கொள்ளும் போது அது, தாங்கள் பாஜகவின் அடிப்படை உறுப்பினராகி விட்டதற்கான உறுப்பினர் எண்ணை தங்களுக்கு அனுப்பும். மேலும் உறுப்பினர் செயல்பாட்டை முழுமையாக்குவதற்கு தங்களது விவரங்களை அனுப்பக்கோரும்.
Airtel customer care எண் என தரப்பட்டுள்ள போலியான எண்ணானது Airtel-ன் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கங்களில் காணப்படவில்லை. இது தொடர்பாக Airtel நிறுவனத்தை தொடர்புகொண்ட போது, ”Airtel-ன் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தில் (www.airtel.com) அளிக்கப்பட்டுள்ள எண்ணிற்கு மட்டும் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக” The Wire செய்தி நிறுவனத்தின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் இணையதள பிரிவுகள் போலியான இணையதளங்கள் மூலம் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள சமூகநல ஆர்வலர்கள் சிலர், சட்டப்படி குற்றமான இது குறித்து தேர்தல் ஆணையத்தில் பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல்கள் ஏதும் இல்லையென்றும் தெரிவித்துள்ளனர்.

http://ns7.tv/ta/how-spurious-airtel-customer-care-number-leads-bjp-membership.html