கொடைக்கானல் அருகே தொல்பொருள் ஆய்வாளர்கள் 300 ஆண்டு பழமையான மனு நீதி சோழனின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ஓலைச் சுவடி ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.
பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியை நந்தி வர்மன் மற்றும் பழனி ஆண்டவர் கலைக் கல்லூரியின் வரலாறு துறை தலைவரும் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் ரவிச்சந்திரன் கொடைக்கானல் மலைப் பகுதியில் வழக்கமாக கடந்த ஞாயிறன்று வந்து செல்லும் வழியில் 300 ஆண்டு பலமைவைந்த பனை இலை ஓலை சுவடியை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஓலைச் சுவடி பழனிமலை பல்லவம் கிராமத்தை சேர்ந்த முந்தைய காலத்தவரால் 1713- லில் எழுதப்பட்டுள்ளது. மேலும் தமிழ் பஞ்சாங்கத்தின் படி இந்த ஓலை 474 பனை, இலைகள் கொண்டுள்ளது. ஒவ்வொரு இலைகளும் 30 செ.மீ உயரம் உடையதாகவும் 2.5 செ.மீ அகலம் கொண்டதாகவும் உள்ளதென ஆசிரியை நந்தி வர்மன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஓலைச்சுவடியில் மனு நீதி சோழனின் வாழ்கை கதைகள் , அவர் பயன்படுத்திய தேர் சக்கரங்கள், அவரது மகன் குறித்த விவரங்கள் அனைத்தும் கவிதை வடிவில் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் , இதன் முதல் 5 பக்கங்களில் விநாயகர், சிவபெருமான், கிருஷ்ணர் போன்ற தமிழ் கடவுள்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஓலைச் சுவடியின் கடைசி பக்கத்தில் ஆசிரியர் குறித்த செய்திகள் அனைத்தும் கொடுக்கப் பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்த நாள் : August 15, 2016 - 01:36 PM
Source; New Gen Media