இந்திய வீடுகளில் ரூ. 78,300 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இருப்பதாக பிரபல இணைய வர்த்தக நிறுவனமான ஓஎல்எக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட பொருட்களின் இணைய வர்த்தகமாகத் திகழும் ஓஎல்எக்ஸ் நிறுவனம் நுகர்வோர் பயன்பாடு குறித்து நாடு முழுவதும் ஆய்வு நடத்தியது. இந்திய அளவில் இந்தவகை பொருட்களுக்கான சந்தைக்கு ரூ.56,200 கோடி அளவுக்கு மதிப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த ஆய்வின்போது பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்கும் சந்தையில் புழங்கும் பணத்துக்கு ’பழுப்புப் பணம்’ என்ற புனைப் பெயரை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. நான்காவது ஆண்டாக வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் சராசரியாக 12 துணி வகைகள், 14 சமையலறை பொருட்கள், 11 புத்தகங்கள், 2 மொபைல் போன்கள் மற்றும் 3 கடிகாரங்கள் ஆகியவைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள் : August 11, 2016 - 07:53 PM
thanks: New Gen Media