பள்ளிவாசலுக்குள் புகுந்து இமாம் மீது தாக்குதல்..!
திருவள்ளுர்- திருப்பாச்சூரில் நடந்துள்ள அக்கிரமம்...!!
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் நேற்றை தினம்(11-08-2016), மாலை சுமார் 5 மனியளவில் பள்ளிவாசலுக்குள் புகுந்து இமாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பள்ளி இமாம் அப்துல் பாசித் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதி 'சின்ராஜ்' மீது நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் குவிந்தனர்.
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மூலம் தாக்குதல் நடத்தியவன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற உத்திரவாதம் அளிக்கப்பட்ட பிறகே மூஸ்லிம்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜமாத்தார்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

Source: https://www.facebook.com/thopputhurai1/photos/a.602204483204020.1073741828.602173676540434/1089402017817595/?type=3&theater