புதன், 28 செப்டம்பர், 2022

பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை: மத்திய அரசு அறிவிப்பு

 28 09 2022

பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை: மத்திய அரசு அறிவிப்பு

பி.எஃப்.ஐ அமைபுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது மத்திய அரசு.  மேலும் இத்தடை உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பி எஃப் ஐ அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். மேலும் நாடு முழுவதும் இந்த சோதனை நடைபெற்றது.

நாடு முழுவதிலிருந்தும் உள்ள  45 பி.எஃப். ஐ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து 11 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து கைது செய்யப்பட்ட நிர்வாகிகளின் பெயர்கள் பின்வருமாறு : எம் மொஹமத் அலி ஜின்னா, மொஹமத் யூசிப், ஏ எஸ் இஸ்மயில் ,  சயித் இஸ்ஷ்க்,  காலித் மொஹமத், அஹமத் இத்ரிஸ், மொஹமத் அபுதாஹிர், காஜா மொய்தீன், யாசர் அர்ஃபத்,  பரக்துல்லா, பயஸ் அஹமத். 

இதில் 5 பேர் மதுரையையும், 2 பேர் கேரளாவையும், கூடலூர், ராமநாதபுரம், தேனி, கோவையை சேர்ந்தவர்கள். இந்தியா முழுவதிலும் உள்ள 15 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிகபட்சமாக கேரளவில்19பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுவரை பி.எஃப் .ஐ அமைப்பின் மீது 19வழக்குகளை என்ஐஏ பதிவு செய்தது.

இந்நிலையில்  பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது மத்திய அரசு. உபா சட்டத்தின் கீழ்  தடை செய்யப்பட்ட 45 அமைப்புகளில் பி.எஃப்.ஐ அமைப்பும் சேர்க்கப்படுகிறது என்றும்  இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/india/centre-bans-pfi-and-its-associates-for-5-years-517205/