புதன், 10 ஆகஸ்ட், 2016

சென்னையில் ஒரு நாள் பயணச்சீட்டு பெற அடையாள அட்டை கட்டாயம்

Mtc-daily-pass
சென்னையில் மாநகர பேருந்துகளில் வழங்கப்படும் ரூ.50 மதிப்புள்ள பயணசீட்டு பெற அடையாள அட்டை அவசியம் என்று போக்குவரத்துக்கு துறை அறிவித்துள்ளது.
சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக ‘ஒன் டே பாஸ்’ என்று சொல்லக்கூடிய ரூ.50 மதிப்புள்ள ஒரு நாள் பயணச்சீட்டு வழங்கபடுவதையொட்டி, பயணச்சீட்டு பெறும் பயணிகள் கட்டாயம் அவர்களது அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
ஒரு நாள் பயணச்சீட்டு சென்னையில் எல்லா பகுதிக்கும் செல்லும் பேருந்திலும் பயன்படுத்தப்படுகிறது. அதில் பாலினம் குறிப்பீடு ஒன்றே குறிப்பிடப்பட்டு இருக்கும் இந்நிலையில் தற்போது அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு ஒரு நாள் பயணச்சீட்டு வழங்கப்படமாட்டாது என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
Source: http://tv.puthiyathalaimurai.com/

Related Posts: