சனி, 13 ஆகஸ்ட், 2016

ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு


தரைவழி தொலைபேசி தொடர்பை ஊக்குவிக்கும் வகையில் வரும் 21-ஆம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ”லேண்ட்லைன்’ மூலம் செய்யும் அழைப்புகளுக்குக் கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
இதற்கு முன் பிஎஸ்என்எல் நிறுவனம் தினமும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை தரைவழி தொலைபேசி மூலம் செய்யப்படும் எந்த அழைப்புக்கும் கட்டணம் கிடையாது என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிஎஸ்என்எல் கட்டணமில்லா சலுகை முறை சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) முதல் அமலுக்கு வருகிறது.
தரைவழி தொலைபேசி, செல்ஃபோன் என எந்த வகையான தொலைத்தொடர்பு இணைப்புக்கு ஞாயிற்றுக்கிழமை பேசினால் இனி கட்டணம் கிடையாது.

Source: http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/47835/every-sunday-bsnl-calls-free

Related Posts: