இப்போது பெண்களோடு ஆண்களும் போட்டி போட்டு கொண்டு அழகுக்கு முக்கியத்துவம் காட்டி வருகின்றனர். வேலை வேலை என்று சுற்றி கொண்டிருக்கும் ஆண்களுக்கு சில ஸ்மார்ட் டிப்ஸ் இதோ!!!
* சிலருக்கு சருமம் வறட்சியாக இருக்கும். சோப்புகளை அடிக்கடி மாற்றுவது சருமத்திற்குக் கேடு விளைவிக்கும். இதனை தவிர்த்து அரிசிமாவு, பால், கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றை கலந்துமுகத்தில் பூசிக் கொள்வதால், வறட்சியைத் தடுக்கலாம். குளித்து முடித்ததும் ஒரு மாய்ச்சரைஸர் உபயோகித்து உடல் முழுவதும் மசாஜ் செய்வதும் வறண்ட சருமத்துக்கு நல்லது.
* வேலை பளு காரணமாக முடி உதிரும் பிரச்னை ஏற்படும் இதற்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணைய் மூன்றையும் சம அளவில் கலந்து உபயோகிப்பது மூலம் முடி உதிர்வு தடுக்கப்படும்.
* சிகரெட் குடித்து உதடு கருமையாக இருப்பவர்கள் மாதுளைச் சாறு மற்றும் புதினா இலையை உதட்டில் தடவி வர கருமை நிறம் மாறும்.
* ஆண்களின் சருமம் கடினமானதாக இருக்கும் அதனை பொலிவூட்ட சந்தனத்துடன் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் மூசி வர முகம் பிரகாசமாகும்.
* வெங்காயம் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதனை வழுக்கை ஏற்பட்ட இடத்தில் காலை மற்றும் மாலையில் நான்கு தேய்த்து, பின் அந்த இடத்தில் தேனைத் தொட்டு தேய்க்க வேண்டும் இப்படி செய்வதால் முடி வளர தொடங்கும்.
* தேங்காய் எண்ணெயை எலுமிச்சை சாற்றில் கலந்து, கூந்தலுக்கு தடவி குளித்து வந்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம். மேலும் கூந்தலும் நன்கு வளரும்.
* செம்பருத்தி பூ, அவுரி விதை, காயவைத்த நெல்லிக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தண்ணீரில் கலந்து சிறிது நேரம் ஊறவைத்து வெள்ளை முடி உள்ள இடங்களில் அதைத் தடவி அரை மணி நேரத்தில் அலசிவிடவும். இது முடியைக் கருப்பாக்குவதுடன் வெள்ளை முடி அதிகமாகாமல் தடுக்கும்.
* முகப்பரு வந்தால் முதலில் ஐஸ் கட்டியை வைத்து ஒற்றடம் கொடுத்து பின் காற்றாலை ஜெல் உபயோகிக்கலாம் இதனால் பருக்கள் வடு ஆகாமல் மறைந்து விடும்.
பதிவு செய்த நாள் : August 13, 2016 - 05:51 PM