புதன், 17 ஆகஸ்ட், 2016

கடந்த ஜூலையில் தான் வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவு: நாசா தகவல்

கடந்த ஜூலையில் தான் வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவு: நாசா தகவல்

வரலாற்றிலேயே அதிக வெப்பமான மாதம் இந்த ஆண்டின் ஜூலை மாதம்தான் என நாசா தெரிவித்துள்ளது. வெப்ப அளவினை பதிவு செய்யும் முறை அமலுக்கு வந்த 1880-ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலகட்டத்தில் இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில்தான் அதிக‌ட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.
கடல் பரப்பு மற்றும் நிலப்பரப்பில் உள்ள வெப்பநிலைகளை கணக்கிட்டதில் 1951-ஆம் ஆண்டு முதல் 1980-ஆம் ஆண்டு வரையில் சராசரியாக பதிவான வெப்பநிலையை விட 2016 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் 0.84 சென்டி கிரே‌ட் வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில் 2016-ஆம் ஆண்டே ‌வரலாற்றில் அதிக வெப்பத்தை பதிவு செய்யும் ஆண்டாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts: