புதன், 17 ஆகஸ்ட், 2016

உலகின் அதிநவீன செயற்கைக் கோளை விண்வெளிக்கு ஏவி சீனா சாதனை

அதிநவீன தகவல் பரிமாற்ற வசதிகள் கொண்ட புதிய
செயற்கைக் கோளை சீனா விண்வெளிக்கு ஏவியுள்ளது. மிஷியஸ் என்ற பெயர் கொண்ட இந்த செயற்கைக்கோள் சீனாவின் வடகிழக்கு பகுதி நகரமான ஜியுக்வானில் இருந்து ஏவப்பட்டது.
அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவும் இதுபோன்ற அதிநவீன செயற்கைக் கோள் விண்ணுக்கு அனுப்பப்படுவது உலகளவில் இதுவே முதல் முறையாகும்.
இந்த செயற்கைக்கோள் விண்ணில் இருந்து அனுப்பும் தகவல்கள், சிதையாமல் வேறு யாரும் ‌இடைமறித்து அறி‌ந்து கொள்ள மு‌டியாத வகையில் பூமிக்கு வந்து சேரும் என சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

Related Posts: