சனி, 13 ஆகஸ்ட், 2016

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

மறைக்கப்பட்ட வரலாறு - 4
பேகம் ஹஜ்ரத் மஹல்
நம்மில் பலருக்கும் இந்த பெயர் தெரியாது*
சரித்திரத்தில் மறைக்கப்பட்டது
ஆங்கிலேயர்கள் அடக்குமுறைக்கு எதிராக 1857-இல் மாமன்னர் *பகதுர்ஷா*தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் அனைவரும் ஆங்கிலேயருக்கு எதிராக பல இடங்களில் போர் நடத்தினர்
அதில் அரசாண்ட இரண்டு வீர மங்கையர் இருந்தனர்.
ஒருவர் ஜான்சி ராணி லக்குமிபாய்,
மற்றொருவர்
உத்திரப்பிரதேசத்தை
ஆண்ட பேகம்
*ஹஜ்ரத் மஹல்*
ஒளத் நவாபான வஜீத் அலிஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர்.
அவரது புதல்வாரன இளவரசர் பிரிஜிஸ் காதிரைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிம்மாசனத்தில் ஏற்றினர்.
பிரிஜிஸ் காதிர் சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற முறையில் அவரது தாயாரான ராணி ஹஜ்ரத் மஹலிடம் ஒப்படைக்கப்பட்டது.
1857 – இல் சிப்பாய் புரட்சி உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோ பிரிட்டீஷ் தூதரகத்தை முற்றுகை இட்டார்.
அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப் பட்டனர்.
தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.
1858 மார்ச் 6ஆம் தேதி 30 ஆயிரம் வீரர்களுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்துநாட்கள் தொடர் போர் நடந்தது.
இப்போரில் மேஜர் ஹட்ஸன், *பேகத்தின் வீரர்களால் கொல் லப்பட்டான்*
ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவா ளர்களுடன் ஒளத்தை விட்டுவெளியேறினார். ஹஜ்ரத் மஹல்
பிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது.
அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபா ளத்திற்குள் தலைமறைவானார்.
பேகத்தின் சொத்துக்களை ஆங்கில அரசு பறிமுதல் செய்தது.
மற்ற மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவர்களது
ஒத்துப் போயிருந்தால் நிம்மதியாக அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம்.
ஆனால் மண்ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார்.
தேசத்தின் விடு தலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தை யும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் கண்னீர் வரவழைக்கும்.
நம் முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைத்து பாருங்கள்
யாருக்காக செய்தார்கள் அனைத்தும் நம் எதிர்கால இந்தியாவிற்காக செய்தார்கள்
அல்லாஹ்விற்க்கு மட்டுமே நாங்கள் அடிமைகள் ஆங்கிலேயர்களுக்கு நாங்கள் அடிமைகள் அல்ல என்று
எந்த வித பிரதிபலனும் இல்லாமல் தியாகங்கள் செய்தார்கள்

Related Posts: