
காவல் துறையின் சதியா ?
காவிகளின் சூழ்ச்சியா ?
காவிகளின் சூழ்ச்சியா ?
எதிர் வீட்டில் உள்ளவன் கைது செய்யும் போது அமைதியாக இருந்தேன் ..
பக்கத்து வீட்டில் உள்ளவன் கைது செய்யும் போது மெளனமாக இருந்தேன் ...
இன்று என்னை கைது செய்யும் போது எதிர்க்க ஆளே இல்லாமல் போச்சு ..?
என சொல்லும் அளவுக்கு நம் சமுதாயம் எந்த பிரச்சனை நடந்தாலும் மெளனியாக இருப்போம் என அமைதி காத்தால் உனக்கு பிரச்சினை என்றால் யார் வருவார் என ஷஹீத் பாபா அடிக்கடி மேடைகளில் முழக்கமிடுவார் .
மதுரையில் தொடரும் முஸ்லீம்களுக்கு எதிரான மனித உரிமை மீரல்கள் ..
ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சு கடைசியிலே மனுசனை கடிச்ச கதையாக மாறும் மதுரை பட்டாசு குண்டு வெடிப்பு வழக்குகள் ...
அவனை கைது செய்த போது அவன் செய்து இருப்பானோ என்ற சந்தேகம்..
இவனை கைது செய்த போது இவன் செய்து இருப்பானோ என்ற சந்தேகம்..
இன்று என்னை கைது செய்த போது தான் தெரிகின்றது அனைத்துமே பொய் வழக்குகள் என சொல்லும் முஸ்லீம் இளைஞர்களின் மனசாட்சியாக ....
கடந்த இரண்டு ஆண்டுகளாக 20 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது ...
தற்போது அபுபக்கர் என்ற இளைஞர் பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் ...
இனி இது போன்ற பொய் வழக்குகளில் காவல் துறை யாரையும் கைது செய்யவே கூடாது என தொடர் உண்ணா நிலை போராட்டத்தை சிறையிலே நடத்தி வருகிறார் அபுபக்கர் ....
அபுபக்கரின் போராட்டத்தை ஆதரிக்கும் வண்ணம் இன்ஷாஅல்லாஹ் இந்திய தேசிய லீக் கட்சி களம் கான உள்ளது ...
தமிழக அரசே மதுரையில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் பொய் கைதுகளை உடனே நிறுத்தி பாதிக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் , பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட அபு பக்கரை விடுதலை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோருகின்றோம் ...
மீறும் பட்சத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுக்கை போராட்டம் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நடத்தப்படும் ...
அன்புடன்
தடா ஜெ.அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர் ...
தடா ஜெ.அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர் ...
தகவல்.
இந்தியதேசியலீக்கட்சி
ஊடகபிரிவு...
இந்தியதேசியலீக்கட்சி
ஊடகபிரிவு...