மொபைல் சிம் கார்டுகளுக்கான குறைந்தபட்ச பயன்படுத்தப்படாத காலத்தினை 90 நாட்களிலிருந்து ஒரு வருடமாக அதிகரித்து தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது.
டேட்டா பேக்குகள் எனப்படும் மொபைல் இண்டெர்நெட் சேவைகளுக்கான அதிகபட்ச காலத்தினை 3 மாதத்திலிருந்து ஒருவருடமாக அதிகரித்ததன் மூலம் இந்த நடைமுறை அமலாகிறது.
இதுவரை, ஒரு மொபைல் எண்ணை ஒரு வாடிக்கையாளர் தொடர்ச்சியாக 90 நாட்கள் பயன்படுத்தாவிடில் அந்த சிம் கார்டு சேவைகள் துண்டிக்கப்படும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது.
இண்டர்நெட் பயன்பாடுகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் வசதியினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொபைல் பயன்பாடு அதிகரிப்பதுடன் புதிய பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் டிராய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.