வியாழன், 4 ஆகஸ்ட், 2016

ஜிஎஸ்டி மசோதா சாமானிய மக்களை எவ்வாறு பாதிக்கும்?...ஒரு பார்வை

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நடைமுறைக்குவந்தால், கட்டுமான பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. அதேவேளையில், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்படும்.
தொலைக்காட்சி, வாஷிங்மெஷின் உள்ளிட்டவற்றுக்கான தற்போதைய வரி 24 முதல் 25 சதவிகிதத்தில் இருந்து 17 முதல் 18 சதவிகிதமாக குறைகிறது. கட்டுமானப் பொருட்களுக்கான வரி 24 முதல் 25 சதவிகிதத்தில் இருந்து 17 முதல் 18 சதவிகிதமாக குறைய வாய்ப்புள்ளது. 24 முதல் 25 சதவிகிதமாக இருக்கும் மரப் பொருட்களுக்கான வரி, 17 முதல்18 சதவிகிதமாக ஆக குறையும்.
பிஸ்கட் மற்றும் கேக் ஆகியவற்றிற்கான‌ வரியும் 24 முதல் 25 சதவிகிதத்தில் இருந்து 17 முதல் 18 சதவிகிதமாக குறைகிறது. மருந்து பொருட்களின் வரி 5 சதவிகிதத்தில் இருந்து இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்து 12 சதவிகிதமாக இருக்கும். செல்போன்களின் வரி 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்ந்திருக்கும். 30 முதல் 40 சதவிகிதமாக ஆக உள்ள விடுதி மற்றும் ஆடம்பர கார்களின் வரி 40 சதவிகிதம‌க அதிகரிக்கும். தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களின் வரி 2 சதவிகிதத்திலிருந்து 5 முதல் 6 சதவிகிதமாக உயர்கிறது. அதேவேளையில் கட்டுமானத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வரி 12 முதல் 15 சதவிகிதத்திலிருந்து 12 சதவிதமாக விலை மாறாமல் நிலையானதாக இருக்க வாய்ப்புள்ளது.