திங்கள், 15 ஆகஸ்ட், 2016

பத்திரிக்கை செய்தி:-


*மெட்ராஸ் ஐஐடியில் மேஜர் ஜெனரல் பஷியின் தேசவிரோத பேச்சு! கேள்விகுறியாகும் நாட்டின் பாதுகாப்பு! கேம்பஸ் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!*
=============================
நேற்றையதினம் மெட்ராஸ் ஐஐடி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய மேஜர் ஜெனரல் பக்ஷியின் பேச்சு வன்முறையை தூண்டிவிடும் விதமாக அமைந்துள்ளது.
"கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு வெறுப்பு பிரச்சாரங்கள், கல்வி கூடங்களில் ஃபாசிச திணிப்பு, இந்திய வரலாற்று திரிபு போன்ற ஈன செயல்களில் ஈடுபட்டு வருவது நாம் எல்லோரும் அறிவோம்.
நாட்டின் அறிவு ஜீவிகளை உருவாக்க வேண்டிய ஐஐடியில் தொடர்ந்து ஃபாசிச சிந்தனைகள் கொண்ட பேச்சாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் பேசுகின்றனர்.
நேற்றையதினம் மெட்ராஸ் ஐஐடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மேஜர் ஜெனரல் பக்ஷியின் பேச்சு உண்மைப்படுத்தியுள்ளது.
அதில் அவர் இந்திய சுதந்திர வரலாறுகளை திரித்தும் , சுதந்திர போராட்ட வீரர்களையும் அவர்கள் செய்த போராட்டங்களையும் கொச்சைப்படுத்தியும் பேசியுள்ளார். மேலும் 2014ஆம் ஆண்டு மோடி பிரதமர் ஆன பிறகுதான் இந்தியாவிற்கு உண்மையில் சுதந்திரம் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு மேஜர் ஜெனர் பொறுப்பில் இருக்கும் பக்ஷி இவ்வாறு பேசியது நம் தேசத்தின் சுதந்திர போராட்டத்தையும், அதற்காக போராடி தன் உயிரை தியாகம் செய்த தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் செயலாகும்.
எனவே, நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொருட்டு மேஜர் ஜெனரல் பக்ஷி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்.
மேலும் இந்தவிதமான பேச்சுக்கள் குறித்து அபினவ் சூர்யா எனற மாணவர் ஐஐடி இயக்குநருக்கு தனது கண்டனத்தை பதிவு செய்யும் விதமாக கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மெட்ராஸ் ஐஐடியில் ஃபாசிசஅடிப்படைவாதிகள் அழைக்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்ற வைக்கப்படுவதாகவும் மேலும் ஆ.எஸ்.எஸின் அறிவுசார் சாகா நடைபெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்"
எனவே கல்வி வளாகங்களில் ஃபாஸிச சிந்தனையை புகுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கல்வி கூடங்களில் மதநல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது.
-அப்துர் ரஹ்மான்
தமிழ் மாநில பொதுச்செயலாளர்
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Related Posts: