ஃபேஸ்புக்கில் தேசத்திற்கு எதிராக புகைப்படம் வெளியிட்ட காஷ்மீர் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
காஷ்மீரைச் சேர்ந்த தபீக் அகமது என்ற பொறியியல் பட்டதாரி, ஃபேஸ்புக்கில் தொடர்ந்து தேசத்திற்கு எதிரான பதிவுகளுக்கு கருத்து கூறியும், தேசத்திற்கு எதிரான பதிவுகளை பதிவு செய்தும், ஷேர் செய்தும் வந்துள்ளார்.
காஷ்மீர் கலவரம் தொடர்பாக இந்தியாவை எலி போன்று சித்தரிதது அவர் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்தார். இதையடுத்து, சத்தீஷ்கர் மாநில காவல்துறையினர், மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் ரயில் நிலையத்தில் வைத்து தபீக் அகமதுவை கைது செய்தனர்.
அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து பதிவு செய்தல் பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த தபீக் அகமது பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு சத்தீஷ்கரில் பணிபுரிந்து வந்தார்.
பதிவு செய்த நாள் : August 06, 2016 - 01:17 PM
Source: http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/india/7/45868/isis-supporter-arrest