சந்திர, சூரிய கிரகணங்கள் சாதாரண மக்களுக்கு வெறும் சாதாரண நிகழ்வுகள் தான். ஆனால் வானிலை ஆராய்ச்சியாளார்கள், ஆர்வலர்களுக்கு அது மிகப்பெரிய நிகழ்வு. அதுவும் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் வரும் போது இதனை அவர்களால் மிஸ் செய்ய முடியாது.
வருகின்ற ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 21ம் தேதி) அன்று பார்சியல் சோலார் எக்ளிப்ஸ் எனப்படும் பகுதி சூரிய கிரகணம் (Partial Solar Eclipse) உருவாக உள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் மத்தியில் நிலவு பயணிக்கும் போது சூரிய கிரகணம் உருவாகிறது.
சூரிய கிரகணம் உச்சமடையும் போது சென்னை மக்களால் சூரிய கிரகணத்தை காண இயலும். சூரியனின் 34% பகுதி சந்திரனால் மறைக்கப்பட்டிருக்கும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் (Executive Director of Tamil Nadu Science and Technology Centre) தலைமை இயக்குநர் சௌந்தரராஜ பெருமாள் அறிவித்துள்ளார். காலை 10:22 மணிக்கு துவங்கி மதியம் 1:41 மணிக்கு நிறைவடைகிறது இந்த சூரிய கிரகணம். கிரகணம் உச்சத்தில் இருக்கும் நேரம் பகல் 11:58 மணியாகும்.